உலக உணவுத் திட்டத்தின் கீழ் 15 லட்சத்து 69 ஆயிரத்து 347 ரூபா செலவில் கொங்கிரீட் வாய்க்கால்
முல்லைத்தீவு புத்துவெட்டுவான் மணல் குளத்தின் பிரதான வாய்க்கால் உலக உணவுத் திட்டத்தின் கீழ் 15 லட்சத்து 69 ஆயிரத்து 347 ரூபா செலவில் கொங்கிரீட் வாய்க்காலாக புனரமைக்கப்பட்டுள்ளது.முல்லைத்தீவு துணுக்காய்கமநல சேவை நிலையத்தின் கீழ் உள்ள மணல் குளத்தின் பிரதான வாய்க்கால் உலக உணவுத் திட்டத்தின் கீழ் 15 லட்சத்து 69 ஆயிரத்து 347 ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டுள்ளது.இதே நேரம் பிரதான வாய்க்காலின் எஞ்சிய ஒரு பகுதி உலக உணவுத் திட்டத்தின் கீழ் மனிதவலு மூலம் புனரமைக்கப்பட்டு உள்ளது.இக்குளத்தின் கீழ் சுமார் 100 ஏக்கருக்கும் மேற்பட்ட வயல் நிலங்கள் காணப்படுவதுடன் குறித்த குளத்தின் கீழான விவசாயிகள் பெரும் போகத்தின் போது நெற்செய்கையியும் சிறு போகத்தி்ன் போது உப உணவுச் செய்கை மேற்கொள்ளும் ஒரு குளமாகவும் இந்த குளம் காணப்படுகின்றது.மிகவும் பழமையான இக்குளத்தினை நம்பி 40க்கு மேற்பட்ட விவசாயிகள் வாழ்ந்து வருகின்றமை குறிப்பிட்த்தக்கது.