
நிறுவன தலைவர்களிடம் பிரதமர் விடுத்த வேண்டுகோள்
மக்களுக்கு செயற்திறனான மற்றும் பயனுள்ள சேவை பெற்றுக் கொடுக்கப்படுவதை நிறுவன தலைவர்கள் உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (11) அலரி மாளிகையில் வைத்து தெரிவித்தார்.
அச்செயற்பாட்டில் நிறுவன தலைவர்கள் தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் ஒத்துழைப்புடன் செயற்பட வேண்டியது மிகவும் முக்கியம் என்னும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.
ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் தற்போதைய நிலை குறித்து அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.
சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு வருகைத்தரும் வாடிக்கையாளர்களின் தேவைக்கேற்ப தலையீடு செய்து துரித வழிகாட்டலை வழங்கவும், செயற்திறனான வகையில் குறித்த சேவையை பெற்றுக் கொடுக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என பிரதமர் தெரிவித்தார்.
அதற்கு நிறுவனத் தலைவர்களின் வழிகாட்டல் அதிகாரிகளுக்கு கிடைக்க வேண்டும் என குறிப்பிட்ட பிரதமர், மக்கள் சேவையை பொறுப்பாகவும் கடமையாகவும் கருதி நிறைவேற்ற வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.