காப்பகத்தில் இருந்த முதியவர் தூக்கிட்டு தற்கொலை
காப்பகத்தில் இருந்த முதியவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை குரோம்பேட்டை புதிய காலனி பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராமன். இவரை வீட்டில் கவனித்துக் கொள்ள ஆள் இல்லாததால் இவரின் தம்பி குமார் என்பவர் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு பெரம்பூர் மடுமாநகர் சின்னக்குழந்தை முதல் தெருவில் உள்ள முதியோர் காப்பகத்தில் கோவிந்தராமனை கொண்டு வந்து சேர்த்துவிட்டு சென்றுள்ளார். அதிலிருந்து மன உளைச்சலில் இருந்த கோவிந்தராமன் காப்பகத்தின் கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். சிறிது நேரம் கழித்து காப்பகத்தில் இருந்த ஊழியர்கள் பார்த்து உடனடியாக செம்பியம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்குச் சென்ற செம்பியம் போலீசார் கோவிந்தராமனின் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.