பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் 3 மணி நேரத்தில் ரூ.80 ஆயிரம்
மூன்று மணி நேரத்தில்மக்களிடம் சேகரித்த பிளாஸ்டிக் கழிவுகள் மூலம் கிடைத்த 80 ஆயிரம் ரூபாயை இந்திய ஜனநாயக சங்கத்தினர் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கினார்கள்.
ஜுன் 5 ஆம் தேதி உலக சுற்றுசூழல் தினத்தில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், கிரீன் கிளப் மற்றும் மதுரை மாநகராட்சி இணைந்து 380 பேர் கொண்ட குழுவினர் “சுற்றுசூழலை காப்போம், பிளாஸ்டிக்கை தவிர்ப்போம்” என்கிற பிரச்சாரத்தோடு மதுரை மாநகர பகுதிகளில் வீடு வீடாக சென்று பயன்பாடற்ற பிளாஸ்டிக் கழிவுகள், இரும்புகள், பேப்பர்களை சேகரித்தனர்.
3 மணி நேரம் நடைபெற்ற இப்பணிகள் மூலம் 2,691 கிலோ பிளாஸ்டிக், 630 கிலோ இரும்பு, 307 கிலோ பேப்பர் என 3 ஆயிரம் கிலோ கிடைத்தன. இவை அனைத்தையும் மறுசுழற்சிக்கு அனுப்பிய வகையில் கிடைத்த 80 ஆயிரத்து 5 ரூபாயை வரையோலையாக முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஷ் சேகரிடம் வழங்கினர்.