சினிமா செய்திகள்
நகைச்சுவை நடிகர் நாகேஷ்
வறுமையின் கோரப்பிடியில் சிக்கி வாலியும், நாகேஷும் தொடக்க நாட்களில் சாப்பாட்டுக்கே திண்டாட்டம் போட்ட காலத்தில்- தன் கையால் சமைத்துப் போட்டு -மாம்பலம் க
பாரதிராஜாவிற்கு சிவாஜி கணேசன் கூறிய அறிவுரை
சிவாஜி கணேசன் அவர்கள் மாரடைப்பு ஏற்பட்டு அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த போது சிவாஜி கணேசனை நலம் விசாரிப்பதற்காக இயக்குநர் பாரதிராஜா ந
அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' என்ற படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம்பெ
எம்.ஜி.ஆர் அவர்களின் சிறப்பு
சிங்கப்பூரில் ஒரு தையற்காரர் , “எம்.ஜி.ஆர் பேஷன் டெயிலர் ” என்று கடை நடத்தி வந்தார். மக்கள் திலகம் படங்களில் அணியும் உடைகளைப் போன்றே உடைகளை தைத்து சிங
அற்புத நடிகர் ஜே.பி சந்திரபாபு
ஜோசப் சந்திரபாபு ரோட்ரி க்யூஸ் என்பதே சந்திரபாபுவின் முழுப்பெயர். சினிமாவுக்காக சுருக்கி ஜே.பி சந்திரபாபு என்றாகிவிட்டது.சந்திரபாபு பிறந்தது தூத்துக்க
சாதனைப் படைத்த மகேஷ் பாபுவின் படம்
மகேஷ் பாபு தெலுங்கு சினிமாவின் மாஸ் ஹீரோக்களில் ஒருவர். அவர் நடித்த படங்கள் அதிகளவில் தமிழில் ரீமேக் ஆகியுள்ளன. அதில் விஜய் நடித்த கில்லி, போக்கிரி ஆக
கராத்தே மாஸ்டர் ஷிகான் ஹூசைனி காலமானார்
புற்று நோய் தாக்கியுள்ளது என்ற வார்த்தையை கேட்டாலே பலரும் அழுதே விடுவார்கள், அல்லது பயத்தாலேயே பாதி மரணித்து விடுவார்கள். ஆனால், மரணத்தையும் மாபெரும்
இயக்குநர் பாரதிராஜாவின் மகன் மனோஜ் மரணம்
இயக்குநர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் பாரதிராஜா இன்று மாலை காலமானார். அவருக்கு வயது 48.. மாரடைப்பு காரணமாக உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இத
'ரெய்டு 2' படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
அஜய் தேவ்கன் (: Ajay Devgn) தற்போது நடித்து முடித்துள்ள ரெய்டு 2 திரைப்படம், 2025 மே 1 அன்று திரையரங்குகளில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த
தங்கும் விடுதியாக மாறியது மம்மூட்டியின் வீடு
பிரபல மலையாள நடிகர் மம்மூட்டி, கொச்சியில் உள்ள பனம்பிள்ளி நகரின் கே.சி. ஜோசப் சாலையில் பல வருடங்களாக வசித்து வந்தார். பிரபல நடிகர்கள் வசிக்கும் இந்தப்
விஜய்யின் ‘ஜன நாயகன்’ எப்போது ரிலீஸ்?
விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.‘ஜன நாயகன்’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னைய
விஜய்யின் ‘ஜன நாயகன்’ எப்போது ரிலீஸ்?
விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படம் ஜனவரி 9-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.‘ஜன நாயகன்’ படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னைய
Ads
 ·   ·  2784 news
  •  ·  1 friends
  • 2 followers

பரீட்சை புள்ளியை முறைகேடாக அதிகரித்த மாணவி – தட்டிக் கேட்ட ஆசிரியருக்கு எதிராக தாயார் பொலிஸில் முறைப்பாடு

பருத்தித்துறையில் ஆரம்பப் பாடசாலை ஒன்றில் ஐந்தாம் தர மாணவர்களிடையே நேற்று முந்தினம் (26) புதன்கிழமை பரீட்சை நடத்தப்பட்டுள்ளது. குறித்த விடைத்தாள்களை சக மாணவர்களை கொண்டு ஒருவர் மாறி ஒருவர் மூலம் திருத்தப்பட்டுள்ளது.

இதன்போது பாதிக்கப்பட்ட மாணவி தனது விடைத்தாளினை திருத்திய மாணவியிடம், விடைத்தாளில் பிழையான விடை காணப்பட்டால் அவற்றை சரியாக்கி அதிக மதிப்பெண் வரும் வகையில் செய்யுமாறு கேட்டுள்ளார்.

அதற்கேற்றவாறே அந்த மாணவியும் பிழையான விடைகள் எழுதப்பட்ட போதிலும் சரியானதாக குறிப்பிட்டு அதிக மதிப்பெண்ணை போட்டுள்ளார்.

இவற்றை அவதானித்துக்கொண்டிருந்த ஆசிரியர் விடைத்தாளினை பார்வையிட்ட போது மேற்குறித்த விடயம் உறுதிப்படுத்தப்பட்டு திருத்திய மாணவியை விசாரித்த நிலையில் அவரும் சக மாணவியின் அறிவுறுத்தலில் தான் அவ்வாறு செய்ததாக தெரிவித்துள்ளார்.

இதையடுத்து முறைகேடான வகையில் மதிப்பெண்களை அதிகமாக போடுமாறு சக மாணவியை அறிவுறுத்திய மாணவியை அழைத்து இவ்வாறு செய்வது தவறு என சுட்டிக்காட்டியதுடன் கண்டிக்கும் வகையில் மெதுவாக அடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து குறித்த மாணவியை, ஆசிரியரால் தாக்கப்பட்டதாக கூறி அவரது பெற்றோரால் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் நேற்று முந்தினம் (26) சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சிகிச்சை பெறும் அளவுக்கு பாதிப்புகள் எவையும் இல்லாத நிலையில் மாணவியை வைத்தியசாலையில் இருந்து விடுவித்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஆசிரியருக்கு எதிராக மாணவியின் தாயாரினால் பருத்தித்துறை பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த முறைப்பாட்டின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ஆசிரியரை நேற்றையதினம் கைது செய்த பருத்தித்துறை பொலிஸார் விசாரணை மேற்கொண்டனர்.

இதையடுத்து குறித்த வகுப்பில் கல்விகற்கும் ஏனைய மாணவர்களது பெற்றோர் ஆசிரியருக்கு ஆதரவாக பருத்தித்துறை பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக நேற்று (27) மாலை ஒன்றுகூடியிருந்தனர்.

பாடசாலை அதிபர் ஊடாக பருத்தித்துறை பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி விடுத்த அறிவுறுத்தலை அடுத்து நேற்று இரவு 8 மணி அளவில் ஆசிரியருக்கு ஆதரவாக திரண்ட பெற்றோர் அங்கிருந்து கலைந்து சென்றிருந்தனர்.

இதன் பின்னர் குறித்த ஆசிரியர் பொலிஸ் காவலில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் (28) வெள்ளிக்கிழமை பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பருத்தித்துறை பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

000

  • 1062
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads