சினிமா செய்திகள்
மணிரத்னத்துடன் அதிகம் பேசாமல் இருக்க காரணம் இதுதான்
இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், இயக்குனர் மணிரத்னத்துடன் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இணைந்து பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் கமலஹாசன் கதாநாயகனாக நடிக்கும்
எனக்குத் திருப்புமுனை தந்த படம் - நடிகர் சார்லி
காமெடி உலகில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்த நடிகர் சார்லியின் இயற்பெயர் வேல்முருகன் தங்கசாமி மனோகர்.தமிழ்த் திரையுலகில் சுமார் ஐநூறுக்கும் மேற்பட்ட
மும்பையில் புதுவீடு வாங்கினார் டாப்ஸி
பாலிவுட் நடிகை டாப்ஸி மும்பையில் புதிய வீடு ஒன்றை வாங்கியுள்ளார். இது அவரும் அவரது சகோதரி சகுன் பன்னுவும் இணைந்து வாங்கிய அடுக்குமாடி குடியிருப்பு ஆகு
பந்தயத்தில் பங்கேற்றபோது அஜித் கார் டயர் வெடித்தது
ஐரோப்பாவில் நடைபெறும் ஜிடி 4 கார் பந்தயத்தில் நடிகர் அஜித்குமார் கலந்து கொண்டுள்ளார். இந்த போட்டி நெதர்லாந்தில் மே 17ஆம் தேதி ஆரம்பமாகியுள்ளது. போர்ஷ்
நடிகை ருக்மிணியின் காரில் இருந்து நகைகள் திருட்டு
நடிகை ருக்மிணி விஜயகுமாரின் காரில் இருந்து வைர மோதிரங்கள் உட்பட ரூ.27 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், கப்பன் பார்க் காவல்துறையினர் ம
கெனிஷா தான் என் வாழ்க்கை துணை - ரவி மோகன்
நடிகர் ரவி மோகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இத்தனை ஆண்டுகளாக முதுகில் குத்தப்பட்டேன். தற்போது நெஞ்சில் குத்தப்பட்டுள்ளேன். கடின உழைப்பு மற்றும் விடா
சண்முகபாண்டியன் நடிப்பில் ‘ரமணா 2’
நடிகர் சண்முக பாண்டியன் கதாநாயகனாக நடித்துள்ள ‘படைத்தலைவன்’ திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ள நிலையில் அதன் விளம்பர விழா ஒன்றில் சிறப்பு விருந்தினராக ப
 எனது உயிருக்கு ஆபத்து என சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்தார் கவுதமி
நடிகை கவுதமி “எனது உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது” எனக் கூறி சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நடிகை கவுதமி சொ
கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டார் நடிகை ஆண்ட்ரியா
கோரஸ் பாடகியாக இருந்த ஆண்ட்ரியா, பச்சைக்கிளி முத்துச்சரம் படம் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தனது கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடி
சந்தானம் நடிக்கும் படம் பற்றிய அப்டேட்
நடிகர் சந்தானம் காமெடியனாக இருந்து கதாநாயகனாக முன்னேறி ஓரளவுக்கு தடம் பதித்து வருகிறார். அதில் ஒரு படம் ஹிட்டானால், நான்கு படங்கள் ப்ளாப் ஆகிறது. அதனா
கூலி படத்திற்காக ரஜினி, லோகேஷுக்கு கலாநிதி மாறன் கொடுத்த சம்பளம்
'லியோ', 'விக்ரம்', 'கைதி' ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் கூலி படத்தை இயக்குகிறார். ரஜினியுடன் பல்வேறு மொழிகளில் இருந்தும் நட்சத்திரங்கள் நடிக்கின
சிவப்பு நிற உடையில் அசத்தும் அழகில் நடிகை தமன்னா
நடிகை தமன்னா சமீபத்தில் அவர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தில் ஒரு கௌரவ வேடத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அவர் நடனமாடிய காவாலா பாடல் வைரல் ஹ
Ads
 ·   ·  2994 news
  •  ·  1 friends
  • 2 followers

இளைஞர் வளத்தை வலுவானதாக கட்டியெழுப்ப சிகரம் நிறுவனம் விசேட நடவடிக்கை - நிறைவேற்றுப் பணிப்பாளர் றுஷாங்கன்

.......

இளைஞர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் வழிகாட்டிகளாக நாம் இருக்க வேண்டுமே தவிர அவர்களின் முயற்சிகளுக்கு தடையானவர்களாக இருக்கக்கூடாது என சுட்டிக்காட்டிய சிகரம் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் றுஷாங்கன், அதற்கான ஒரு வழிமுறையே 

வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சினைக்கான தீர்வை காண்பதற்கான முயற்சியும் இருக்கின்றது என தெரிவித்துள்ளார். 

யாழ் நகரில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்த சிகரம் நிறுவனத்தின் நிறைவேற்றும் பணிப்பாளர் றுஷங்கன், மேலும் கூறுகையில் -

வேலையற்ற பட்டதாரிகள் பிரச்சினைக்கு சிகரம் தரும் தீர்வு

தொழில்மையமான கற்கைத்துறைகளாக

க.பொ.த.(உ/த) கலைத்துறை பாடநெறிகள்

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினை எமது நாட்டில் தொடர்ந்தும் எந்தவிதத் தீர்வும் இல்லாமல் நீடித்து வருகிறது.

குறிப்பாக ஒவ்வொரு வருடமும் பல்கலைக் கழகங்களிலிருந்து பட்டம் பெற்று வெளியேறும் ஆயிரக்கணக்கான மாணவர்களில் கணிசமான தொகையினர் இவ்வாறு தம்மை வேலையற்ற பட்டதாரிகள் என்று அடையாளப்படுத்திக்கொண்டு வீதிகளில் இறங்கிப் போராட நிர்ப்பந்திக்கப்பட்டு வருகின்றனர்.

இந்த இளைஞர்களில் பெரும்பாலானவர்கள் கலைத்துறை பட்டதாரிகள் என்பது தெரியவரும்.

மேலும் பாடத்தெரிவுகளை மேற்கொள்ளும்போது, அந்தப் பாடச் சேர்மானங்கள் மூலம் கிடைக்கக்கூடிய எதிர்கால வாழ்க்கைத் தொழிலுக்கான வாய்ப்புக்கள் எவை என்பது குறித்தோ, பல்கலைக்கழக நுழைவுக்குத் தேவையான இசட் புள்ளிகளை பெறுவதற்கு இந்தப் பாடச் சேர்மானங்கள் எவ்வாறு துணை புரியும் என்பதுபற்றியோ மாணவர்களுக்கு எதுவும் தெரிவதில்லை.

அதுமட்டுமல்லாது பல்கலைக்கழக பட்டக்கல்வி மட்டத்திலும் தொழில்மையமான பாடத் தெரிவுகளுக்கான வழிகாட்டல்கள் வழங்கப்படுவதில்லை.

தாம் பட்டக்கல்வியைத் தொடரும் பாடங்களுக்கு தொழிற்சந்தையில் இருக்கும் கேள்வி என்ன? தமது பாடங்களில் தொழில்மையமான இருக்கக்கூடிய வாய்ப்புக்கள் எவை என்பதுபற்றியெல்லாம் தெரியாமலே மாணவர்கள் பட்டக்கல்வியையும் பூர்த்திசெய்கிறார்கள்.

இதனாலேயே, பட்டக்கல்வியை நிறைவுசெய்த பின்னரும் தொழில்வாய்ப்பு பெற முடியாதவர்களாக இந்த மாணவர்கள் காணப்படுகின்றனர்.

பட்டக்கல்வியை நிறைவுசெய்தவர்களின் நிலையே இதுவாயின், க.பொ.த. உயர்தரத்தில் கலைத்துறைப் பாடங்களைக் கற்று பல்கலைக்கழக அனுமதி கிடைக்காதவர்களின் நிலை இதைவிட மோசமானது.

இந்தளவுக்கும், இலங்கையில் அதிகளவு மாணவர்கள் ஏனைய துறைகளுடன் ஒப்பிடும்போது கலைத்துறையிலேயே கல்வி கற்று வருகிறார்கள்.

குறிப்பாக வடக்கு, கிழக்கு மற்றும் மலையகப் பகுதிகளில் இது இன்னமும் அதிகமாகும்.

தொழில்வாய்ப்புக்களும், தொழில் கல்விக்கான வாய்ப்புக்களும் மிகக் குறைவாகவுள்ள இந்தப் பகுதிகளிலுள்ள இவ்வாறு கலைத்துறையைத் தெரிவுசெய்து கற்கும் மாணவர்கள் மிகவும் பரிதாபகரமான நிலைமைக்கே ஒவ்வொரு வருடமும் தள்ளப்பட்டு வருகின்றனர்.

அதேநேரம் வடக்கு மாகாணத்தில் 15 வருடங்களுக்கு மேலாக கல்வி-தொழில் வழிகாட்டி சேவையை வழங்கி, கருத்தரங்குகள் மூலமாகவும், சிகரம் இளையோர் மாதாந்த சஞ்சிகை, பிரசுரங்கள், இலங்கையிலேயே முன்முதலாக தமிழ் மொழியில் வெளியிடப்பட்ட கல்வி-தொழில் வழிகாட்டி கையேடு என்பவற்றின் மூலமாக ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு தொழில்மையமான கல்விக்கான வழிகாட்டலை வழங்கி, நூற்றுக்கணக்கானவர்களுக்கு நேரடித் தொழிற்பயிற்சிகளின் மூலம் உள்நாட்டு – வெளிநாட்டு வேலைவாய்ப்புக்களையும் பெற்றுக்கொடுத்து, ஒரு தனியார் தொழில் முயற்சியாக இந்தச் சேவையை வழங்கியைமையைக் கௌரவித்து இலங்கை வர்த்தக கைத்தொழில் மன்றங்களின் சம்மேளத்தினால் தொழில்முனைவோருக்கான விருதையும் பெற்ற அனுபவம் கொண்ட சிகரம் நிறுவனம், கலைத்துறை மாணவர்களின் இந்த வேலையில்லாப் பிரச்சினைக்கான புத்திபூர்வமான செயன்முறைத் தீர்வு ஒன்றை முன்வைக்கிறது.

உயர்தரக் கலைத்துறைப் பாடங்களை அடிப்படையாகக் கொண்டு, தொடர்பாடல் ஊடகக் கற்கைகள் துறை, விருந்தோம்பல் மற்றும் வடிமைப்புத் துறை, அழகியல், கலை-இலக்கிய கற்கைகள் துறை, வர்த்தகம் சந்தைப்படுத்தல் கற்கைகள்துறை, சட்ட கற்கைகள் துறை, பொதுச்சேவை – அபிவிருத்தி கற்கைகள் துறை என்று 6 தொழில்மையமான கற்கைகள் துறைகளாக கலைத்துறை பாடங்களை வகைப்படுத்தி, இவற்றில் மாணவர்களுக்கு அதிகம் பொருத்தமான துறையை அவர்களது இயல்பான ஆற்றல், ஆர்வம், இயல்தகைமை என்பவற்றின் அடிப்படையில் தெரிவுசெய்வதற்குத் தேவையான வாழ்க்கைத்தொழில் உளவியல் மதிப்பீட்டையும் செய்து, அவரவருக்குப் பொருத்தமான துறைகளில் மாணவர்கள் கல்வியைத் தொடர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதுதவிர, கல்வி கற்கும் அனைத்து மாணவர்களுக்கும் தொடர்பாடலுக்கான ஆங்கில பாடநெறியை கட்டாய பாடமாக வழங்குவதுடன், அவர்கள் தெரிவுசெய்யும் துறைகளுக்குத் தேவையான தொழில்சார் திறன்விருத்திப் பயிற்சிகளையும் மேலதிகமாக வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதன்மூலம், மாணவர்கள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றியதுமே தொழில் ஒன்றில் இணைந்துகொள்வதற்கான தகுதியைப் பெற்றுக்கொள்வதுடன், பல்கலைக்கழக அனுமதி கிடைத்தால் பகுதிநேரமாக தொழில்செய்துகொண்டு பல்கலைக்கழகக் கல்வியைத் தொடரவும், கிடைக்காவிட்டால் முழுநேரமாகத் தொழில்செய்துகொண்டு பகுதிநேரமாக வெளிவாரிப் பட்டக்கல்வியைத் தொடர்வதற்கும் மாணவர்களால் இயலுமாக இருக்கும்.

அத்துடன் ஏப்ரல் மாத பிற்பகுதியில் இந்தக் கற்கைநெறிகளையும் நாம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கவிருப்பதால், ஏற்கனவே க.பொ.த. உயர்தரத்துக்குத் தோற்றி பல்கலைக்கழக அனுமதி அல்லது தொழில்வாய்ப்புக்களைப் பெற முடியாதவர்களும், சாதாரணதரத்துக்கு மேல் கல்வியைத் தொடர முடியாதவர்களும் உரிய தயார்ப்படுத்தல் கற்கைநெறிகளைக் கற்றுத்தேறி, இந்தத் தொழில்வாண்மையான கற்கைநெறிகளைப் பூர்த்தி செய்து தொழில்வாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.

இவ்வாறு, பல்கலைக்கழக அல்லது பட்டக்கல்வி நுழைவுக்கு முன்னரோ, அன்றி, அவற்றை நிறைவுசெய்தவுடனேயோ மாணவர்கள் தொழில்திறன்களை விருத்திசெய்து, வேலைவாய்ப்புக்களைப் பெற்றுக்கொள்ளக்கூடியவர்களாக தயார்ப்படுத்தப்படுவதால், பட்டக்கல்வியை நிறைவுசெய்த பின்னர் வேலையற்ற பட்டதாரிகள் என்று தம்மைத்தாமே தாழ்த்திக்கொண்டு வீதிகளில் நின்று போராடவேண்டிய இழிநிலையும் அவர்களுக்கு ஏற்படாது. அதுமட்டுமல்லாது வழி மாறி செல்லும் நிலையும் தடுக்கப்படுகின்றது என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

  • 1193
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads