Category:
Created:
Updated:
டொரோண்டோ பெரும்பாக பகுதி மக்கள் வெள்ள அபாயம் காரணமாக நீர்நிலைகளுக்கு செல்ல வேண்டாம் என்றும் இயற்கை உறைபனி மேற்பரப்புகளில் நுழைய வேண்டாம் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கனடாவின் சுற்றுச்சூழல் திணைக்களம் சிறப்பு வானிலை எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. மழை மற்றும் மிதமான வெப்பநிலைகள் காரணமாக நகரின் சில பகுதிகளில் அடுத்த 24 மணிநேரத்தில் வெள்ளம் ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக எச்சரித்துள்ளது.
செவ்வாய்க்கிழமை இரவு மற்றும் புதன்கிழமை 15 முதல் 25 மிமீ வரை கனமழை பெய்யும் என்று எதிர்வு கூறப்பட்டுள்ளது. இதனால், கீழ்நிலப் பகுதிகளில் உள்ளூர் வெள்ளம் மற்றும் சாலைகளில் நீர் தேங்கும் நிலை ஏற்படலாம். புதன்கிழமை பிற்பகல் மற்றும் மாலை கடுமையான இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.