அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாக டொனால்ட் ட்ரம்ப் இன்று பொறுப்பேற்பு
அமெரிக்க ஜனாதிபதியாக இரண்டாவது முறையாகவும் டொனால்ட் ட்ரம்ப் இன்று தமது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார்.
இலங்கை நேரப்படி அவர் இன்று இரவு 10.30 க்கு பதவியேற்கவுள்ளார். பதவியேற்பின் போது பல முக்கிய நிர்வாக ஆவணங்களில் அவர் கைச்சாத்திடவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டெனால்ட் ட்ரம்பின் பதவியேற்பிற்காக அமெரிக்காவின் தலைநகர் உள்ளிட்ட பல நகரங்கள் அலங்கரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்தநிலையில், அமெரிக்க தலைநகரில் வைத்து தமது கட்சி ஆதரவாளர்களிடம் நேற்று அவர் உரையாற்றியுள்ளார்.
குறித்த நிகழ்வில் கலந்துக்கொண்டிருந்த டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் அவரது உருவம் மற்றும் பெயர் பதிக்கப்பெற்ற ஆடைகள், பாதணிகள் மற்றும் ஆபரணங்களை அணிந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த நவம்பர் மாதம் 05 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது.
இதன்போது, தேர்தலில் டொனால் ட்ரம்ப் 49.9 சதவீத வாக்குகளையும், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட அமெரிக்கத் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் 48.4 சதவீத வாக்குகளையும் பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.