Ads
இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் 900 ஆறு ஓட்டங்களை கடந்தார் கீரன் பொல்லார்ட்
மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் சகலதுறை ஆட்டக்காரர் கீரன் பொல்லார்ட் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில், தனது 900 ஆறு ஓட்டங்களை கடந்துள்ளார்.
இதன் மூலம், இருபதுக்கு 20 கிரிக்கெட் வரலாற்றில் 900 ஆறு ஓட்டங்களைக் கடந்த உலகின் 2ஆவது வீரர் எனும் சாதனையை பொல்லார்ட் படைத்துள்ளார்.
துபாயில் நடைபெற்ற ஐஎல்டி இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரில் இந்த சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். கிறிஸ் கெய்ல் 1,056 ஆறு ஓட்டங்களைக் கடந்து முதலிடத்தில் உள்ளார்.
இதேவேளை இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் 900 ஆறு ஓட்டங்களை கடந்த முதல் 4 இடங்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி வீரர்களே உள்ளமை குறிப்பிடத்தக்கது
00
Info
Ads
Latest News
Ads