சினிமா செய்திகள்
கடுகு எண்ணெய் பயன்படுத்தினால் இதய ஆரோக்கியம் ஏற்படுமா?
பழங்கள், காய்கறிகள் உள்ளிட்டவை இதய ஆரோக்கியத்திற்கு நல்லது என்பது வழக்கமான உண்மை என்றாலும், கடுகு எண்ணெய் இதய ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தருகிறது என
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
தினேஷின் நடிப்பைப் பார்த்து மிரண்டுவிட்டேன் - இயக்குனர் ஷங்கர்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் சில வாரங்களுக்கு முன்னர் வெளியான ‘லப்பர் பந்து’ திரைப்படம் இந்த் வருடத்தின் சூப்ப
விக்ரம் படத்தை நிராகரித்த சாய் பல்லவி
யோகி பாபு நடிப்பில் உருவான மண்டேலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் மடோன் அஸ்வின். அதையடுத்து சிவகார்த்திகேயன் மற்றும் அதித் ஷங்கர் நடித்த மாவீர
வீடுகளை இழந்து தவிக்கும் ஹாலிவுட் பிரபலங்கள்
அமெரிக்காவின் கலிபொர்னியா மாகாணத்தில் லாஸ் ஏஞ்சலஸ் பகுதியில் ஏற்பட்டுள்ள காட்டுத்தீ பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. காட்டுத்தீயால் பல கிலோ மீட்ட
‘விடாமுயற்சி’ திரைப்படம் எப்போது வெளிவரும்?
அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ திரைப்படம் பொங்கல் தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் திடீரென எதிர்பாராத காரணத்தினால் பொங்கல் ரிலீஸ்
மகாராஜா படத்தை பாராட்டிய சீன தூதர்
நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான மகாராஜா இந்தியா மட்டுமின்றி சீனாவிலும் கூட வெற்றிநடை போட்டு வருகி
கவியரசர் மாற்றிக் கொடுத்த பாடல் வரிகள்
நாலு பேருக்கு நன்றி என்கிற பாடலில் வரும் கடைசி சரணத்தை கவியரசர் பின்வருமாறு எழுதியிருந்தார்'வாழும் போது வருவோர்க்கெல்லாம்வார்த்தையாலே நன்றி சொல்வோம்.ப
நடிகர் எஸ்.எஸ்.ஆர் MGR பற்றி கூறியது
1958, ஜனவரியில் பெரியார் மற்றும் தமிழ்நாட்டுத் தலைவர்களை அன்றைய பிரதமர் நேரு 'நான்சென்ஸ்' என்று சொன்னதைக் கண்டித்து, கடும் எதிர்ப்பு நிலவியது. அந்த உண
ஆட்டம் போட்ட கௌதம் மேனன்
கோட் படத்தை அடுத்து ஏஜிஎஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் டிராகன் படம் உருவாகி வருகி
தற்போது அவர் குட் பேட் அக்லி படத்திற்கு தனது பகுதிக்கான டப்பிங் பணியையும் முடித்துள்ளார். இது குறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது சமூக வலைத்தள
‘உதயம்’ தியேட்டரை இடிக்கும் பணி தொடங்கியது
சென்னை அசோக்நகரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது உதயம் திரையரங்கு. இதில் 4 திரையரங்குகளில் இயங்கி வருகின்றன. சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக
Ads
 ·   ·  2230 news
  •  ·  1 friends
  • 1 followers

வடக்கில் உள்ள வெற்றிடங்களுக்கு நிரப்ப வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்களை நியமிக்க சத்தமின்றி நடக்கும் முன்னகர்வு – வடக்கு மக்கள் அதிர்ச்சி

வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த மாணவர்கள் சில துறைகளை உயர்கல்விக்காக தேர்ந்தெடுக்காமையால் இங்குள்ள வெற்றிடங்களுக்கு வேறு மாகாணத்தைச் சேர்ந்தவர்களை நியமிக்கவேண்டிய நிலைமை காணப்படுகின்றது என வடக்கு மாகாண ஆளுநர்  வேதநாயகன் தெரிவித்துள்ளார்.

யாழ். கல்விக் கண்காட்சி - 2025 திறப்பு விழா சனிக்கிழமை யாழில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பிரதம விருந்தினராகவும், சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண பிரதம செயலர் இளங்கோவனும், கலந்து கொண்டு கண்காட்சியை ஆரம்பித்து வைத்தனர்.

பிரதம விருந்தினராக கலந்து கொண்ட ஆளுநர் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

முன்னைய காலத்தில் இலங்கையின் அரச பல்கலைக்கழகங்களுக்கு தெரிவாகும் குறிப்பிட்ட தொகையானவர்களுக்கு மாத்திரமே உயர்கல்விக்கான வாய்ப்பு இருந்தது. தற்போது அரச பல்கலைக்கழக வாய்ப்பு கிடைக்காத மாணவர்களும் உயர்கல்வியைக் கற்பதற்கான வாய்ப்பு பரந்தளவில் கிடைக்கின்றன. அதனைச் சரிவரப் பயன்படுத்தவேண்டும்

அத்துடன் எமது முயற்சி மற்றும் தேடலில்தான் உயர்கல்வித் தெரிவு இருக்கின்றது. பொருத்தமான துறைகளை தெரிவு செய்வதன் ஊடாக வேலை வாய்ப்பை உறுதிப்படுத்திக் கொள்ளமுடியும்.

வடக்கு மாகாணத்தின் முக்கிய சொத்து கல்வி ஆகும். இவ்வாறான கல்விக் கண்காட்சிகள் எமது மாகாண மாணவர்களின் எதிர்காலத்துக்கு சிறப்பானவை, இவை தொடரவேண்டும் என மேலும் தெரிவித்தார்.

ஆளுநரின் குறித்த கருத்தானது அந்தந்த மாவட்டங்களில் அந்தந்த மாவட்டங்களை சேர்ந்தவர்களே நியமனம் செய்யப்பட வேண்டும் என இருக்கும் நடைமுறையை மாற்றி வடக்கில் தென்னிலங்கையை சேர்ந்தவர்களை நியமிக்க திரை மறைவில் நகர்வுகள் முன்னெடுக்கப்படுவதற்கான கட்டியமாகவே இருக்கின்றதென கல்விமான்களும் புத்திஜீவிகளும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

  • 1110
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads