சினிமா செய்திகள்
மகாராஜா படத்தை பாராட்டிய சீன தூதர்
நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான மகாராஜா இந்தியா மட்டுமின்றி சீனாவிலும் கூட வெற்றிநடை போட்டு வருகி
கவியரசர் மாற்றிக் கொடுத்த பாடல் வரிகள்
நாலு பேருக்கு நன்றி என்கிற பாடலில் வரும் கடைசி சரணத்தை கவியரசர் பின்வருமாறு எழுதியிருந்தார்'வாழும் போது வருவோர்க்கெல்லாம்வார்த்தையாலே நன்றி சொல்வோம்.ப
நடிகர் எஸ்.எஸ்.ஆர் MGR பற்றி கூறியது
1958, ஜனவரியில் பெரியார் மற்றும் தமிழ்நாட்டுத் தலைவர்களை அன்றைய பிரதமர் நேரு 'நான்சென்ஸ்' என்று சொன்னதைக் கண்டித்து, கடும் எதிர்ப்பு நிலவியது. அந்த உண
ஆட்டம் போட்ட கௌதம் மேனன்
கோட் படத்தை அடுத்து ஏஜிஎஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் டிராகன் படம் உருவாகி வருகி
தற்போது அவர் குட் பேட் அக்லி படத்திற்கு தனது பகுதிக்கான டப்பிங் பணியையும் முடித்துள்ளார். இது குறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது சமூக வலைத்தள
‘உதயம்’ தியேட்டரை இடிக்கும் பணி தொடங்கியது
சென்னை அசோக்நகரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது உதயம் திரையரங்கு. இதில் 4 திரையரங்குகளில் இயங்கி வருகின்றன. சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக
கீர்த்தி சுரேஷ் சினிமாவில் இருந்து விலகுகிறாரா ?
நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலர் ஆண்டனி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் வருக
ஜெயிலர் 2 ......வெளியான தகவல்
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் வெளியான வேட்டையன் திரைப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. தற்போது அவர் கூலி படத்தில் நடித்து வருகிறார். அதன் பின்னர்
சூர்யா 45: இயக்குனர் ஆக மட்டுமில்லாமல் இன்னொரு பொறுப்பையும் ஏற்கும் ஆர் ஜே பாலாஜி
குவா மற்றும் சூர்யா 44 ஆகிய படங்களுக்குப் பிறகு சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம்
பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3
மோகன் லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 2015 ஆம் ஆண்டு வெ
35 வயது வரை சினிமாவில் இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் நடித்து வரும் தமன்னாவின் சொத்து மதிப்பு குறித்த தகவலை இங்கே காணலாம்.இந்த ஆண்டு தமன்னா நடிப்
கழுத்தில் சிலுவையுடன் ஸ்ருதிஹாசன்
உலக நாயகனின் மகள் ஸ்ருதிஹாசன் ரஜினியுடன் கூலி படத்தில் நடித்து வருகிறார். இது தவிர தெலுங்கு படமும் அவர் கைவசம் இருக்கிறது.மேலும் டகோயிட் படத்தில் இருந
Ads
 ·   ·  8104 news
  •  ·  5 friends
  • I

    9 followers

புதிய வைரஸ் தொடர்பில் விளக்கமளித்துள்ள சீனா

சீனாவில் வேகமாக பரவி வருவதாக கூறப்படும் புதிய வகை வைரஸ்கள் தொடர்பாக சீனா தற்போது விளக்கமளித்துள்ளது. இதில், நாட்டில் குறிப்பிடத்தக்க சுகாதார அச்சுறுத்தல் எதுவும் ஏற்படவில்லை என்றும் இந்த வைரஸ் தாக்கமானது வழக்கமான குளிர்கால தொற்றுதான் என்றும் சீனா தரப்பு கூறியுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் உலக நாடுகளில் தாக்கத்தை ஏற்படுத்தி 5 வருடங்கள் கடந்துள்ள நிலையில், சீனாவில் மீண்டும் புதிய வகை வைரஸ்கள் பரவி வருவதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன. Human metapneumovirus (HMPV) எனப்படும் ஒரு வைரஸ் வேகமாக பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இந்த வைரஸினால் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவது தொடர்பான காணொளிகளும் சமூக ஊடகங்களில் வெளியாகி உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த நிலையில், இந்த வைரஸ் பாதிப்பு தொடர்பாக சீனா தற்போது விளக்கமளித்துள்ளது.

அந்தவகையில், நாட்டில் குறிப்பிடத்தக்க சுகாதார அச்சுறுத்தல் எதுவும் ஏற்படவில்லை என்றும், இது வழக்கமான குளிர்கால தொற்றுதான் என்றும் சீன தரப்பு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக சீன வெளியுறவுத் துறை அமைச்சர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், வடக்கு காற்றின் காரணமாக, குளிர்காலத்தில் வழக்கமாக சீனாவில் நுரையீரல் பாதிப்பு, தொற்று நோய் பாதிப்பு அதிகமாக இருப்பது வழக்கம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இந்த நோய் தாக்கமானது குறைவான பாதிப்பை கொண்டிருக்கிறது என்றும் கடந்த ஆண்டை விட பாதிப்பும் தீவிரமும் குறைவுதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சீன மக்கள் மற்றும் சீனாவில் வாழும் வெளிநாட்டினரின் சுகாதாரத்தை உறுதி செய்வதில், சீன அரசாங்கம் எப்போதும் கவனம் செலுத்தும் எனத் தெரிவித்துள்ள அவர், சீனாவுக்கு பயணம் செய்வது இன்னமும் பாதுகாப்பானதுதான் என்றும் விளக்கம் கொடுத்துள்ளார்.

அத்தோடு, நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து வழிகாட்டு நெறிமுறை வெளியிடப்பட்டுள்ளது என்றும் எதுவும் அச்சுறுத்தும் வகையில் இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சீனத்தில் கடந்த சில நாள்களாக கடுமையான காய்ச்சல், இருமல் உள்ளிட்ட அறிகுறிகளுடன் வைத்தியசாலையில் ஏராளமான மக்கள் குவிந்து வரும் நிலையில், இதற்கு எச்.எம்.பி.வி. அல்லது மெடாநியுமோ வைரஸ் என பெயரிடப்பட்டுள்ளது.

வைரஸ் தாக்கம் அங்கு காணப்பட்டாலும், இதுவரை அதனை அவசரநிலையாக சீன சுகாதாரத் துறையோ அல்லது உலக சுகாதார அமைப்போ அறிவிக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  • 343
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads