2025 ஆம் ஆண்டிற்கான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சம்பியன்ஸ் கிண்ண தொடர் பாகிஸ்தானில்
2025 ஆம் ஆண்டிற்கான சர்வதேச கிரிக்கெட் பேரவையின் சம்பியன்ஸ் கிண்ண தொடர் பாகிஸ்தானில் ஆரம்பமாகவுள்ளது.
பெப்பிரவரி மாதம் 19 ஆம் திகதி ஆரம்பமாகி மார்ச் 9 ஆம் திகதி நிறைவடையும் இந்த போட்டி தொடரில் 8 அணிகள் பங்கு கொள்கின்றன. போட்டிகள் பாகிஸ்தானிலும் டுபாயிலும் நடைபெறவுள்ளன.
இந்திய அணி பங்குகொள்ளும் சகல போட்டிகளும் டுபாயிலேயே நடைபெறும் என சர்வதேச கிரிக்கட் பேரவை உறுதியளித்துள்ளது.
இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ள அணிகளின் ஏ பிரிவில் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகள் பங்குகொள்கின்றன.
பி பிரிவில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன.
இந்திய அணியில் தலைவரான ரோகித் சர்மாவிற்கு பதிலாக ஹார்திக் பாண்ட்யா செயற்படுவாரென தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலையில் டெஸ்ட் போட்டிகளிலிருந்தும் ரோகித் சர்மா ஓய்வு பெறுவாரென தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஷ00