சினிமா செய்திகள்
மகாராஜா படத்தை பாராட்டிய சீன தூதர்
நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த தமிழ் ஆக்‌ஷன் த்ரில்லர் படமான மகாராஜா இந்தியா மட்டுமின்றி சீனாவிலும் கூட வெற்றிநடை போட்டு வருகி
கவியரசர் மாற்றிக் கொடுத்த பாடல் வரிகள்
நாலு பேருக்கு நன்றி என்கிற பாடலில் வரும் கடைசி சரணத்தை கவியரசர் பின்வருமாறு எழுதியிருந்தார்'வாழும் போது வருவோர்க்கெல்லாம்வார்த்தையாலே நன்றி சொல்வோம்.ப
நடிகர் எஸ்.எஸ்.ஆர் MGR பற்றி கூறியது
1958, ஜனவரியில் பெரியார் மற்றும் தமிழ்நாட்டுத் தலைவர்களை அன்றைய பிரதமர் நேரு 'நான்சென்ஸ்' என்று சொன்னதைக் கண்டித்து, கடும் எதிர்ப்பு நிலவியது. அந்த உண
ஆட்டம் போட்ட கௌதம் மேனன்
கோட் படத்தை அடுத்து ஏஜிஎஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் டிராகன் படம் உருவாகி வருகி
தற்போது அவர் குட் பேட் அக்லி படத்திற்கு தனது பகுதிக்கான டப்பிங் பணியையும் முடித்துள்ளார். இது குறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது சமூக வலைத்தள
‘உதயம்’ தியேட்டரை இடிக்கும் பணி தொடங்கியது
சென்னை அசோக்நகரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது உதயம் திரையரங்கு. இதில் 4 திரையரங்குகளில் இயங்கி வருகின்றன. சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக
கீர்த்தி சுரேஷ் சினிமாவில் இருந்து விலகுகிறாரா ?
நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலர் ஆண்டனி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் வருக
ஜெயிலர் 2 ......வெளியான தகவல்
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் வெளியான வேட்டையன் திரைப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. தற்போது அவர் கூலி படத்தில் நடித்து வருகிறார். அதன் பின்னர்
சூர்யா 45: இயக்குனர் ஆக மட்டுமில்லாமல் இன்னொரு பொறுப்பையும் ஏற்கும் ஆர் ஜே பாலாஜி
குவா மற்றும் சூர்யா 44 ஆகிய படங்களுக்குப் பிறகு சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம்
பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3
மோகன் லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 2015 ஆம் ஆண்டு வெ
35 வயது வரை சினிமாவில் இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் நடித்து வரும் தமன்னாவின் சொத்து மதிப்பு குறித்த தகவலை இங்கே காணலாம்.இந்த ஆண்டு தமன்னா நடிப்
கழுத்தில் சிலுவையுடன் ஸ்ருதிஹாசன்
உலக நாயகனின் மகள் ஸ்ருதிஹாசன் ரஜினியுடன் கூலி படத்தில் நடித்து வருகிறார். இது தவிர தெலுங்கு படமும் அவர் கைவசம் இருக்கிறது.மேலும் டகோயிட் படத்தில் இருந
Ads
 ·   ·  2162 news
  •  ·  1 friends
  • 1 followers

தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களை அழைத்துவரும் சதி நடவடிக்கைகள் இடம் பெறுகிறதா என்றும் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது – சிற்றி வன்பொருள் வாணிப உரிமையாளர்

வேறு மாகாணங்களில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு எவ்வாறு கருங்கல் சல்லி மற்றும் கற்தூள் எடுத்து வரப்படுகிறதோ அதே நடைமுறைதான் சுண்ணக் கல்லுக்கும் இருக்கிறது என சுட்டிக்காட்டியுள்ள வடக்கின் பிரபல தொழிலதிபரும் சிற்றி வன்பொருள் வாணிப உரிமையாளருமான பிரகதீஷ்வரன், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனது செயற்பாடுகளால், சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு மேற்கொள்ளப்படும் வியாபார நடவடிக்கைகளை தடுத்து தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களை அழைத்துவரும் சதி நடவடிக்கைகள் இடம் பெறுகிறதா என்றும் சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் யாரோ 4 பேர் வழங்கிய தகவலை பொதுமக்கள் வழங்கிய தகவலை வைத்து தனது நிறுவனத்திற்கு எதிராக ஊடகங்களில் தவறான செய்தியை பரப்பியுள்ளார் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்

நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன், நேற்றுமுன்தினம் இரவு சுண்ணக்கல் ஏற்றிவந்த கனரக வாகனம் ஒன்றை மறித்து அந்த வாகனத்தை சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைதிருந்தார். இந்த சம்பவம் தொடர்பில் அந்த நிறுவன உரிமையாளர் பிரகதீஷ்வரன் யாழ்ப்பாணத்தில் இன்றையதினம் (04.01.2025) ஊடகவியலாளர் சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் -   

65 வருட காலமாக கட்டடப் பொருள் வியாபாரத்தை நாம் செய்து வருகிறோம். 1992 ஆம் ஆண்டு 33 இலக்க சட்டத்தின் 28 (1)( 2) பிரிவுகளின் பிரகாரம் எமது வாகனம் சுண்ணக் கற்களை எடுத்துச் சென்றது. 

குறிப்பாக 28 பிரிவின் முதலாவது உப பிரிவு கனியவளங்களை அகழ்வதற்கான அனுமதி எடுத்துச் செல்வதற்கான வழி அனுமதிப்பத்திரம் அதன் பிரகாரம் கல் ஆலைகளுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது. 

கல் உடைக்கும் ஆலைகள் தமது வியாபார நிலையத்தை பதிவு செய்துள்ளார்கள், மத்திய சுற்றடல் அதிகார சபையின் அனுமதிபெற்றுள்ளார்கள் அதுமட்டுமல்லாது கனியவளத் திணைக்களத்தில் அனுமதி பெற்றுள்ளார்கள். 

இதேநேரம் நவீன தொழில்நுட்பத்தின் மூலம் கொழும்பிலிருந்து ஜிபிஎஸ் மூலம் கண்காணிப்பு நடவடிக்கைகள் இடம் பெறுகின்றன.  இவ்வாறு சகல அனுமதிகளும் பெற்றவர்களிடமிருந்து நாம் கல்லை மட்டும் வாங்குகிறோம் நாம் கிடங்கு கிண்டுவதோ அல்லது கல்லை உடைப்பவர்களோ அல்ல. 

குறித்த கற்களுக்கு யாழ்ப்பாணத்தில் கிராக்கி குறைந்துள்ள நிலையில் முறைப்படி அனுமதி பெற்றவர்களிடமிருந்து பணம் கொடுத்து அவர்களின் கல்லை கொள்வனவு செய்து திருகோணமலைக்கு கொண்டு செல்கிறோம். அதில் நாமும் இலாபம் அடைவதோடு கல்லுடைக்கும் தொழிலாளர்கள் மற்றும் கல் ஆலைகளை நம்பி தொழில் செய்பவர்களின் வாழ்வாதாரத்தையும் நாம் நீண்டகாலமாக பாதுகாத்து வருகிறோம். 

அரசாங்கம் உள்ளூர் முதலீட்டாளர்களையும் உற்பத்திகளை ஊக்குவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கூறுகிறது. அதனடிப்படையில் குறித்த பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளை  மேற்கொள்வதற்காக இரண்டு அடி ஆழம் வரை கல் அகழ முடியும்.

ஆனால் இளங்குமரன் எம்பி தென்மராட்சியில் உள்ள பழைய கிடங்கு ஒன்றினை காட்டி நாம் புன்னாலைக் கட்டுவேன் பகுதியில் எடுத்துச் சென்ற சுண்ணக் கல்லுக்கு விளக்கம் கொடுக்கிறார்.

இதேநேரம் எமது நிறுவனத்தை நம்பி நேரடியாக 180 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கிறார்கள். அதேபோல் கல் உடைக்கும் ஆலைகளை நம்பி பரம்பரை பரம்பரையாக 300 இற்கும் அதிகமானோர் இருக்கின்றனர்.

யாரோ நான்கு பேர் சொன்ன தகவலை கேட்டு இவ்வாறு செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினனர் இந்த கல்லுடைக்கும் தொழிலை மேற்கொள்ளும் 300 க்கும் மேற்பட்டவர்களின் வாழ்வாதாரத்துக்கு பதில் கூறுவாரா?.

இதனால் குறித்த நாடாளுமன்ற உறுப்பினரது செயற்பாடு தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதேநேரம் அவர் வழங்கிய ஊடக செய்திகள் தொடர்பில் காங்கேசன்துறையில் அமைந்துள்ள கணணி குற்ற பிரிவுக்கு முறைப்பாடு வழங்க உள்ளேன். 

சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு எமது வியாபார நடவடிக்கைகள் இடம் பெற்று வரும் நிலையில் அதனை தடுத்து தென்னிலங்கையைச் சேர்ந்தவர்களை அழைத்துவரும் சதி நடவடிக்கைகள் இடம் பெறுகிறதா என்ற சந்தேகம் எழுகின்றது

இதேநேரம் சட்டத்துக்கு உட்பட்டு அன்றிலிருந்து இன்று வரை எமது வியாபார நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையில் சிலரின் தூண்டுதலின் பேரில் எமது நிறுவனத்தையும் எமது வியாபாரத்தையும் அபகீர்த்திக்கு உள்ளாக்கும் வகையில் இளங்குமரன் எம்பி செயல்பட்டிருக்கிறார்.

பிரிவு இரண்டின் பிரகாரம் அரை கனியங்களை எடுத்து செல்வதற்கான அனுமதி தேவையில்லை இதை அறியாத இளங்குமரன் எம்பி எமது வாகனத்தை மறித்து கற்களுக்கு மேல் போடப்பட்டிருந்த பாதுகாப்பு உறையினை கிழித்து சட்டத்தை தன் கையில் எடுத்துள்ளார். 

முன்பதாக வவுனியா பொலிசார் எமது வாகனத்தை மறித்து நீதிமன்றத்தில் முன்னிறுத்தப்பட்ட நிலையில் நீதிமன்றம் சட்டத்துக்கு உட்பட்டு வர்த்தக நடவடிக்கை இடம் பெறுவதாக எமது வாகனத்தை விடுவித்தது. 

அது மட்டுமல்லாது மற்றொரு நீதிமன்றமான கெப்பெற்றிக்கொல்லாவை நீதிமன்றமும் சட்டத்துக்கு உட்பட்டு எமது வியாபார நடவடிக்கைகள் இடம் பெறுவதாக தீர்ப்பு வழங்கியது .

வவுனியா நீதிமன்றம் மற்றும் கெப்பற்றிக்கொல்லாவ நீதிமன்றத்தில் பொலிசார் தாக்கல் செய்த வழக்கில் சட்டத்துக்கு உட்பட்டு சுண்ணக்கல் எடுத்துச் செல்லப்படுவதாக கௌரவ நீதிமன்றங்கள் தனது தீர்ப்பில் சுட்டி சுட்டிக்காட்டியுள்ளன. 

அந்தவகையில் மாற்றத்தை விரும்பிய மக்களுக்கு ஏமாற்றத்தை வழங்குவது அரசாங்கத்தின் நோக்கமாக இருக்கக் கூடாது.  எனவே தொழில் வழங்குனர்களையும் முதலீட்டாளர்களையும் மன உளைச்சலுக்கு உள்ளாக்காமல் செயல்படுமாறு நாடாளுமன்ற உறுப்பினரை கேட்பதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

000

  • 378
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads