Ads
ஒயிட்ஹார்ஸில் ஒருவர் பலி
ஒயிட்ஹார்ஸ் பகுதியில் இடம்பெற்ற மனிதப் படுகொலை தொடர்பான விசாரணையில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சந்தேக குற்றவாளி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஆர்.சி.எம்.பி தெரிவித்துள்ளது.
அன்றையதினம் பிற்பகல் 3.40 மணியளவில் 7வது அவென்யூ மற்றும் பிரதான வீதியின் மூலைக்கு அருகிலுள்ள ஒரு வீட்டிற்கு அழைக்கப்பட்டதாகவும், அங்கு பலத்த காயங்களுடன் ஒரு ஆண் இருப்பதைக் கண்டதாகவும் காவல்துறையினர் புத்தாண்டு தினத்தன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்தனர். சம்பவ இடத்தில் துணை மருத்துவர்களின் முதலுதவி இருந்த போதிலும், அந்த மனிதர் இறந்துவிட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
ஆண் சந்தேக குற்றவாளி ஒருவர் விரைவாக அடையாளம் காணப்பட்டு பின்னர் கைது செய்யப்பட்டதாக ஆர்.சி.எம்.பி தெரிவித்துள்ளது.
Info
Ads
Latest News
Ads