சினிமா செய்திகள்
நடிகர் எஸ்.எஸ்.ஆர் MGR பற்றி கூறியது
1958, ஜனவரியில் பெரியார் மற்றும் தமிழ்நாட்டுத் தலைவர்களை அன்றைய பிரதமர் நேரு 'நான்சென்ஸ்' என்று சொன்னதைக் கண்டித்து, கடும் எதிர்ப்பு நிலவியது. அந்த உண
ஆட்டம் போட்ட கௌதம் மேனன்
கோட் படத்தை அடுத்து ஏஜிஎஸ் புரொடக்ஷன் நிறுவனத்தின் அடுத்த தயாரிப்பாக பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கும் டிராகன் படம் உருவாகி வருகி
தற்போது அவர் குட் பேட் அக்லி படத்திற்கு தனது பகுதிக்கான டப்பிங் பணியையும் முடித்துள்ளார். இது குறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் தனது சமூக வலைத்தள
‘உதயம்’ தியேட்டரை இடிக்கும் பணி தொடங்கியது
சென்னை அசோக்நகரில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இயங்கி வருகிறது உதயம் திரையரங்கு. இதில் 4 திரையரங்குகளில் இயங்கி வருகின்றன. சென்னையின் அடையாளங்களில் ஒன்றாக
கீர்த்தி சுரேஷ் சினிமாவில் இருந்து விலகுகிறாரா ?
நடிகை கீர்த்தி சுரேஷ் சமீபத்தில் தனது நீண்ட நாள் காதலர் ஆண்டனி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில், இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் வருக
ஜெயிலர் 2 ......வெளியான தகவல்
ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த மாதம் வெளியான வேட்டையன் திரைப்படம் சுமாரான வெற்றியைப் பெற்றது. தற்போது அவர் கூலி படத்தில் நடித்து வருகிறார். அதன் பின்னர்
சூர்யா 45: இயக்குனர் ஆக மட்டுமில்லாமல் இன்னொரு பொறுப்பையும் ஏற்கும் ஆர் ஜே பாலாஜி
குவா மற்றும் சூர்யா 44 ஆகிய படங்களுக்குப் பிறகு சூர்யா ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை டிரீம் வாரியர்ஸ் நிறுவனம்
பான் இந்தியா படமாக உருவாகும் த்ரிஷ்யம் 3
மோகன் லால், மீனா நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் வெளியான திரிஷ்யம் திரைப்படம் இந்தியாவின் பல்வேறு மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. 2015 ஆம் ஆண்டு வெ
35 வயது வரை சினிமாவில் இந்தியா முழுவதும் பல்வேறு மொழிகளில் நடித்து வரும் தமன்னாவின் சொத்து மதிப்பு குறித்த தகவலை இங்கே காணலாம்.இந்த ஆண்டு தமன்னா நடிப்
கழுத்தில் சிலுவையுடன் ஸ்ருதிஹாசன்
உலக நாயகனின் மகள் ஸ்ருதிஹாசன் ரஜினியுடன் கூலி படத்தில் நடித்து வருகிறார். இது தவிர தெலுங்கு படமும் அவர் கைவசம் இருக்கிறது.மேலும் டகோயிட் படத்தில் இருந
பொங்கல் ரிலீசில் இருந்து பின் வாங்கிய வீரதீர சூரன்
செம கெத்தாக வீரதீர சூரன் படத்தில் மிரட்டுகிறார் விக்ரம். தங்கலான் படத்தில் கோமணத்தை கட்டிட்டு வந்த விக்ரமை இப்படி பார்த்தவுடன் ரசிகர்கள் ஆர்ப்பரித்து
சர்ச்சையில் சிக்கிய இளையராஜா
விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டார்கோவிலில் நேற்று இளையராஜா அவருடைய ஆல்பமான திவ்ய பாசுரங்கள் இசைக்கப்பட்டு மாலையில் நாட்டியஞ்சலி நடைபெற
Ads
 ·   ·  2162 news
  •  ·  1 friends
  • 1 followers

7 ஆம் திகதி புதிய ஆண்டில் முதலாவது நாடாளுமன்ற அமர்வு

பாராளுமன்றத்தை 2025 ஜனவரி 7ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை கூட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டிருப்பதாக நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

சபாநாயகர் வைத்திய கலாநிதி ஜகத் விக்ரமரத்ன தலைமையில் அண்மையில் (31) நடைபெற்ற நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.

இதற்கு அமைய ஜனவரி 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.30 வரை வாய்மூல விடைக்கான கேள்விக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.30 மணி வரை “மத்திய ஆண்டு நிதி நிலை அறிக்கை 2024” தொடர்பில் ஆளும் கட்சியினால் கொண்டுவரப்படும் சபை ஒத்திவைப்பு பிரேரணை மீதான விவாதம் இடம்பெறவிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தெரிவித்தார்.

ஜனவரி 8ஆம் திகதி புதன்கிழமை மு.ப 9.30 மணி முதல் மு.ப 10.00 மணிவரை பிரதமரிடம் கேட்கப்படும் கேள்விகளுக்காக (4 கேள்விகள்) நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் மு.ப 10.00 மணி முதல் மு.ப 10.30 மணி வரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக (5 கேள்விகள்) நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து மு.ப 10.30 மணி முதல் பி.ப 5.00 மணி வரை இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டளைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, வெளிநாட்டுச் செலாவணிச் சட்டத்தின் கீழான கட்டளைகள், கொடுப்பனவு மற்றும் தீர்ப்பனவு முறைமைகள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி, துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்கள் அபிவிருத்தி அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளை, கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழான ஒழுங்குவிதி என்பன விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.

அன்றையதினம் பி.ப 5.00 மணி முதல் 5.30 மணி வரை சபை ஒத்திவைப்பு நேரத்தின் போதான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 9ஆம் திகதி வியாழக்கிழமை மு.ப 9.30 முதல் மு.ப 10.30 மணிவரை வாய்மூல விடைக்கான கேள்விகளுக்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் மு.ப 10.30 மணி முதல் மு.ப 11.30 மணிவரை வரை இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழான கட்டளை, விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட ஆறு கட்டளைகள், நலன்புரி நன்மைகள் சட்டத்தின் கீழ் பிரசுரிக்கப்பட்ட ஒழுங்குவிதி என்பன விவாதிக்கப்படவுள்ளன.

இதனைத் தொடர்ந்து பி.ப 5.30 மணிவரை எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்படும் பிரேரணை தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதத்தை நடத்துவதற்கும் இங்கு இணக்கம் காணப்பட்டது.

ஜனவரி 10ஆம் திகதி வெள்ளிக்கிழமை மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் முன்வைக்கப்படவுள்ளன.

இதற்கு அமைய மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர்களான குமார வெல்கம, எச்.நந்தசேன மற்றும் ரவ டியூடர் குணசேகர ஆகியோர் தொடர்பான அனுதாபப் பிரேரணைகளுக்காக அன்றையதினம் மு.ப 9.30 மணி முதல் பி.ப 5.30 மணிவரையான நேரம் ஒதுக்கப்பட்டிருப்பதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மேலும் தெரிவித்தார்.

000

  • 539
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads