கௌதம் அதானி இலஞ்ச வழக்கு - மூன்று வழக்குகளை ஒன்றிணைக்க நியூயோர்க் நீதிமன்றம் உத்தரவு
265 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் தொழிலதிபர் கௌதம் அதானி மற்றும் பிறருக்கு எதிராக தொடரப்பட்ட மூன்று வழக்குகளை ஒன்றிணைக்க நியூயோர்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அதன்படி, இந்த வழக்குகள் கூட்டு விசாரணையில் ஒன்றாக விசாரிக்கப்படும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நீதித்துறையின் செயல்திறனை மேம்படுத்துவதற்கும் முரண்பட்ட அட்டவணைகளைத் தவிர்ப்பதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக நீதிமன்றம் கூறியது.
அதானி மற்றும் ஏனையவர்கள் அரச மின்சார விநியோக நிறுவனங்களுடன் சூரிய ஆற்றல் ஒப்பந்தங்களைப் பெறுவதற்கு 265 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலஞ்சம் கொடுத்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
அமெரிக்க வங்கிகள் மற்றும் சூரிய சக்தி திட்டங்களுக்கு அதானி குழுமம் நிதி திரட்டிய முதலீட்டாளர்களிடம் இருந்து உண்மை மறைக்கப்பட்டதாக அமெரிக்க சட்டத்தரணிகள் முன்னதாக குற்றம் சாட்டினர்.
எவ்வாறெனினும், அதானி குழுமம் இந்த குற்றச்சாட்டுகளை “ஆதாரமற்றது” என்று மறுத்து. “நாங்கள் ஒரு சட்டத்தை மதிக்கும் அமைப்பு, அனைத்து சட்டங்களுக்கும் முழுமையாக இணங்குகிறோம்” என்று கூறியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
000