தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை - மூன்று வினாக்களுக்கு இலவச புள்ளிகள் வழங்கப்படும் - பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு
உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, அண்மையில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் மூன்று வினாக்களுக்கு இலவச புள்ளிகள் வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது
உச்ச நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, அண்மையில் நடைபெற்ற 2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் மூன்று வினாக்களுக்கு இலவச புள்ளிகள் வழங்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் எச். ஜே. எம். சி.அமித் ஜயசுந்தர நேற்று புதன்கிழமை (1) மாலை அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த செப்டெம்பர் மாதம் 15ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் மூன்று வினாக்கள் கசியப்பட்டிருந்தது.
இந்த சர்ச்சைக்கு தீர்வு காணும் வகையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
000