ரோகித் சர்மாவின் உரை இரத்து - இந்திய அணிக்குள் வலுக்கும் குழப்பங்கள்
அவுஸ்திரேலிய பிரதமர் கிரிபில்லி ஹவுஸில் நடத்திய புதுவருட நிகழ்வின்போது உரையாற்றவிருந்த இந்திய அணி தலைவர் ரோகித் சர்மாவின் உரையானது இரத்து செய்யப்பட்டுள்ளது.
போர்டர்-கவாஸ்கர் கிண்ண தொடரில் அவுஸ்திரேலியா அணி ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், இந்திய அணிக்கு எழுந்துள்ள இயல்பற்ற நிலையை எடுத்துக்காட்டுவதாக இந்திய ஊடகங்கள் கூறுகின்றன.
இந்நிலையில், மெல்போர்னில் கடந்த திங்கட்கிழமை அவுஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீர், ஓய்வு அறையில் வைத்து, இந்திய அணி வீரர்களை கடுமையாக கண்டித்தார் என்ற செய்தி வெளியாகியுள்ள நிலையிலேயே இந்த செய்தியும் வெளியாகியுள்ளது.
இந்தநிலையில் வீரர்களின் ஓய்வு அறையில் இடம்பெறுகின்ற கருத்தாடல்கள், அந்த ஓய்வு அறைக்;கு வெளியே கசிவது சிறந்ததல்ல என்று இந்திய அணியின் முன்னாள் வீரர் இர்ஃபான் பதான் கருத்துரைத்துள்ளார்.
எட்டு ஆண்டுகளில் முதல் முறையாக இந்தியா மதிப்புமிக்க போர்டர்-கவாஸ்கர் கிண்ணத்தை விட்டுக்கொடுக்கும் தருவாயில் உள்ளது எனினும் இதனை தவிர்க்கவேண்டுமானால், இந்தியா நாளை சிட்னியில் ஆரம்பமாகவுள்ள ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெறவேண்டும்.
இதன்போதே தொடரை 2க்கு2 என்ற அளவில் சமன் செய்யமுடியும். எனவே இந்திய அணிக்கு இந்தப் போட்டியில் பாரிய அழுத்தம் சேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
000