பிறந்தது ஆங்கிலப் புத்தாண்டு - அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் நிறைந்த ஆண்டாக அமையட்டும்
பிறந்துள்ள 2025 புத்தாண்டு அனைவருக்கும் சாந்தியும் சமாதானமும் நிறைந்ததாக ஆண்டாக அமைய வேண்டும் என தமிழ் பூங்கா இணையம் தனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றது
இந்நிலையில் புத்தாண்டை வரவேற்கும் முகமாக கொழும்பு உட்பட நாடளாவிய ரீதியில் பட்டாசுக்கள் கொளுத்தி பல்வேறு கொண்டாட்டங்கள் இடம்பெற்றது.
கொழும்பு துறைமுக நகரில் கவர்ச்சிகரமான வாணவேடிக்கைகள் இடம்பெற்றதுடன், தாமரை கோபுர வளாகத்தில் வண்ண விளக்குகளுடன் வானவேடிக்கை நிகழ்ச்சியும் இடம்பெற்றன.
நாடளாவிய ரீதியாக உள்ள மதஸ்தலங்களில் விசேட வழிபாடுகளும் நேற்றிரவு இடம்பெற்றன.
இதேவேளை, பசுபிக் பிராந்தியத்திலுள்ள கிரிபாட்டி தீவு, இலங்கை நேரப்படி நேற்று பிற்பகல் 3.30க்கு முதலாவதாக 2025 புத்தாண்டை வரவேற்றது.
கிரிபாட்டி மக்கள் புத்தாண்டை வரவேற்கும் வகையில் கொண்டாட்டங்களை ஏற்பாடு செய்திருந்ததாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கிரிபாட்டி தீவுக்கு பிறகு உலகின் முதல் நாடாக நியூசிலாந்து 2025 புத்தாண்டை வரவேற்றது.
இலங்கை நேரப்படி நேற்று மாலை 4.30 க்கு அந்த நாட்டில் புத்தாண்டு பிறந்தது. அதனையடுத்து அவுஸ்திரேலியா, ஜப்பான் மற்றும் தென்கொரியா உள்ளிட்ட நாடுகள் 2025 புத்தாண்டை வரவேற்றமை குறிப்பிடத்தக்கது
000