சினிமா செய்திகள்
கழுத்தில் சிலுவையுடன் ஸ்ருதிஹாசன்
உலக நாயகனின் மகள் ஸ்ருதிஹாசன் ரஜினியுடன் கூலி படத்தில் நடித்து வருகிறார். இது தவிர தெலுங்கு படமும் அவர் கைவசம் இருக்கிறது.மேலும் டகோயிட் படத்தில் இருந
பொங்கல் ரிலீசில் இருந்து பின் வாங்கிய வீரதீர சூரன்
செம கெத்தாக வீரதீர சூரன் படத்தில் மிரட்டுகிறார் விக்ரம். தங்கலான் படத்தில் கோமணத்தை கட்டிட்டு வந்த விக்ரமை இப்படி பார்த்தவுடன் ரசிகர்கள் ஆர்ப்பரித்து
சர்ச்சையில் சிக்கிய இளையராஜா
விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டார்கோவிலில் நேற்று இளையராஜா அவருடைய ஆல்பமான திவ்ய பாசுரங்கள் இசைக்கப்பட்டு மாலையில் நாட்டியஞ்சலி நடைபெற
பாடகி ஸ்ரேயா கோஷலின லேட்டஸ்ட் போட்டோ ஷூட்
இந்தியாவில் பல மொழிப் பாடகியாக வலம் வருபவர் ஸ்ரேயா கோஷல். பல மொழிகளிலும் இவர் பாடல்களுக்கு என தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. 2002 ஆம் ஆண்டு தேவ்தாஸ் எ
ராதிகா ஆப்தே பெண் குழந்தைக்கு தாயானார்
தமிழில் தோனி படத்தின் மூலம் அறிமுகமான ராதிகா ஆப்தே அதன்பின் ஆல் இன் ஆல் அழகுராஜா, வெற்றிச் செல்வன், ஆகிய படங்களில் நடித்தார். சூப்பர்ஸ்டார் ரஜினியின்
அந்த நடிகரின் காலில் விழ நினைத்தேன் - இளையராஜா
50 முறைக்கு மேல் பார்த்த படம்: இந்த நடிகரின் காலில் விழ நினைத்தேன்; இளையராஜா ஓபன் டாக்!இந்த நடிகரின் நடிப்பை பார்த்து பிரமித்து போய் அவரின் காலில் விழ
வீர தீர சூரன் பட ரிலீஸ் தேதியில் மாற்றம்
தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 படங்களுக்கு பிறகு ஒரு ஹிட் கொடுத்த நடிகர் என்றால் அது விக்ரம். சேது படத்திற்கு முன்பு எத்தனையோ படங்களில் நடித்து அந்த
சிகிச்சைக்கு செல்லும் முன்னர் முடி காணிக்கை செய்தார் சிவராஜ் குமார்
கன்னட சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகரான ராஜ்குமாரின் மூத்த மகனான சிவராஜ், கடந்த 30 ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வருகிறார். ஆனால் கன்னடம் தாண்டி வெளிமொ
எம்ஜிஆரை ஜெய்சங்கர் எப்படி கூப்பிடுவாருன்னு தெரியுமா?
மக்கள் திலகம், புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல், ஏழைகளின் இதயக்கனின்னு போற்ப்பபடுபவர் எம்ஜிஆர். தனது கருத்துகள் ஒவ்வொன்றும் திரைப்படங்களில் நல்ல பயனுள
தோல்வியால் நிம்மதியை இழந்த சூர்யா
கங்குவா படம் கொடுத்த மிகப்பெரிய தோல்வியால் நிம்மதியை இழந்த சூர்யா படப்பிடிப்பு தளத்தில் சோகமாக இருந்து வருகிறாராம். மேலும் இதிலிருந்து மீண்டு வருவதற்க
47 வயதில் திருமணம் செய்து கொண்ட ‘பாகுபலி’ நடிகர்
பாகுபலி திரைப்படத்தில் நாயகி அனுஷ்காவின் மாமாவாக நடித்திருந்தவர் நடிகர் சுப்புராஜ், கோழையாக இருந்து அதன்பின் வீரமாக மாறி, வீரமரணம் அடைந்த காட்சியில் அ
நடிகை கஸ்தூரி இன்று செய்தியாளர்களை சந்தித்தபோது, ‘உதயநிதி ஸ்டாலின் சினிமா செய்திகள் குறித்து “நான் அவற்றை பார்ப்பதில்லை” என கூறினார். அவர் தனது ரெட் ஜ
Ads
 ·   ·  2047 news
  •  ·  1 friends
  • 1 followers

கடற்றொழிலாளர் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை என்றால் என்ன - ஈ.பி.டி.பியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் கேள்வி

இந்திய பிரதமர் நரேந்திர மோடி - இலங்கையின் ஜனாதிபதி அனுரவின் சந்திப்பின்போது கடற்றொழிலாளர்கள் விடயத்தில் மனிதாபிமான அணுகுமுறை கடைப்பிடிக்கப்பட வேண்டும் என கூறப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் குறித்த மனிதாபிமான அணுகுமுறை என்றால் என்ன என்பது தொடர்பில் ஜனாதிபதியுடன் வினவவுள்ளேன் என முன்னாள் கடற்றொழில் அமைச்சரும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகமுமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்றையதினம் (19.12.2024) நடைபெற்ற ஊடக சந்திப்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய குறித்த விடயம் தொடர்பான கேள்விக்கு பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் -

ஜனாதிபதியின் அண்மைய இந்திய விஜயத்தின் போது இலங்கை – இந்தியா இடையே கடற்றொழிலாளர்கள் விடயம் தவிர இணக்கம் காணப்பட்ட அல்லது கைச்சாத்திடப்பட்ட ஏனைய விடயங்கள் அனைத்தும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட திட்டங்களை வலுவூட்டியதாகவே அமைந்துள்ளது. அதனடிப்படையில் குறித்த செயற்பாட்டை நான் வரவேற்கின்றேன்.  

இதேவேளை கடற்றொழிராளர் பிரச்சினைகளில் எதுவிதமான தீர்வுகளையும் குறித்த விஜயத்தின்போது எட்டப்பட்டதாக தெரியவில்லை. இதேநேரம் மனிதாபிமான அடிப்படையில் குறித்த விடயத்தை அணுக வேண்டும் என்ற நிலைப்பாடு வலியுறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவ்வாறாயின் மனிதாபிமான நிலைப்பாடு என்பது என்ன என்பதே இன்றுள்ள கேள்வியாக இருக்கின்றது.

அதாவது இலங்கையின் கடற்பரப்பிற்குள் இந்திய மீன்பிடியாளர்கள் வந்து மீன்களை பிடித்து செல்வதற்கும் அவ்வாறான சந்தர்ப்பங்களில் இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்யாதிருக்க வேண்டும் என்பதே இந்த மனிதாபிமான நிலைப்பாடாக இருக்க வேண்டும்.

ஆனால் எனது நிலைப்பாடு அன்றும் சரி இன்றும் சரி எமது கடற்பரப்பிற்குள் சட்டவிரோதமாக இந்திய மீன்பிடியாளர்கள் உள்நுழைந்து மீன்களை பிடிக்கவோ எமது வளங்களை அபகரிக்கவோ ஒரு வினாடி கூட இடமளிக்க கூடாதென்பதாகவே இருக்கின்றது. இதை நான் பொது வெளியிலும் பல தடவைகள் கூறியிருக்கின்றேன்.

அதுமட்டுமல்லாது கடந்தகாலம் நான் ஆட்சியில் இருந்தபோது இலங்கை இந்திய வெளிவிவகார உயரதிகாரிகள் கலந்துகொண்ட கலந்துரையாடிலின்போது சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. அப்போதும் இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு எந்தவகையிலும் இந்திய சட்டவிரோத மீன்பிடி செயற்பாடுகளுக்கு இடம் கொடுக்க முடியாதென நான் கூறியிருந்தேன் என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

அந்தவகையில் தற்போது சிலர் ஊடகங்களில் கூறுவது போன்று எந்தவொரு சந்தர்ப்பத்திலும் எமது கடல் வளத்தையோ கடற்பரப்பையோ இந்திய மீன்பிடியாளர்களுக்கு இடங்கொடுப்பதற்கான சந்தர்ப்பத்தை கொடுப்பதற்கு இடமளிக்கவில்லை என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

  • 1123
  • More
Comments (0)
Login or Join to comment.
Info
Category:
Created:
Updated:
Ads
Latest News
1-24
Ads