Ads
உக்ரைன் - ரஷ்ய போரின் எதிரொலி - ஐரோப்பிய ஒன்றியத்தின் செலவீனத்தில் பாரிய மாற்றம்
ஐரோப்பிய ஒன்றியம் தனது பாதுகாப்பு செலவீனத்தை 10 மடங்காக அதிகரிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பாதுகாப்புக்காக 10 பில்லியன் யூரோக்களை செலவிடும் ஐரோப்பிய ஒன்றியம், அடுத்த 7 வருடங்களில் 100 பில்லியன் யூரோக்களை செலவிட திட்டமிட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா நடாத்தி வரும் தாக்குதல் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஐரோப்பிய ஒன்றியம் இந்த தீர்மானத்தை மேற்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், இது ரஷ்யாவின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள மேற்கத்திய நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என்பதை எடுத்துக்காட்டுகின்றது.
இதேவேளை, நேட்டோ அமைப்புடனான உறவை மேலும் வலுப்படுத்துவதோடு அமைப்பின் குறை மற்றும் நிறைகளை அடையாளம் காணும் திட்டங்களை ஐரோப்பிய ஒன்றியம் பின்பற்ற திட்டமிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
000
Info
Ads
Latest News
Ads