Ads
வங்காள விரிகுடாவில் நாளைமுதல் மீண்டும் காற்றுச் சுழற்சி - வானிலையாளர் பிரதீபராஜா எதிர்வுகூறல்
வங்காள விரிகுடாவில் நாளை (07) முதல் மீண்டும் ஒரு காற்றுச் சுழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியற்துறை தலைவரும், சான்றுபடுத்தப்பட்ட வானிலையாளருமான கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
இந்த காற்றுச் சுழற்சியானது மேற்கு அல்லது வடக்கு திசை நோக்கி நகர்ந்து, அடுத்த 3 நாட்களில், இலங்கைக்கு அண்மித்த பகுதிகளில் வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேநேரம் நாளை ஏற்படுகின்ற காற்றுச் சுழற்சியினால் பாரிய பாதிப்புகள் ஏற்படாது. எனினும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகள் உட்பட நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களுக்கு மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளதாக யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியற்துறை தலைவரும், சான்றுபடுத்தப்பட்ட வானிலையாளருமான கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
000
Info
Ads
Latest News
Ads