Category:
Created:
Updated:
கடந்த அரசாங்கத்தின் மூலம் மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எதிர்வரும் வாரஇறுதியில் நாட்டிற்கு விளக்கமளிக்கப்படும் என புதிய ஜனநாயக முன்னணி தெரிவித்துள்ளது.
கடந்த தேர்தல் காலப்பகுதியில் வெவ்வேறான 361 மதுபான அனுமதிப்பத்திரங்கள் வெளியிடப்பட்டுள்ளமை தொடர்பில் சபை முதல்வர், அமைச்சர் பிமல் ரத்நாயக்க நாடாளுமன்றத்தில் முன்வைத்த கருத்துக்கு பதிலளிக்கும் வகையில் குறித்த விளக்கம் அமையும் எனவும் புதிய ஜனநாயக முன்னணியின் பேச்சாளர் ஒருவர் சிங்கள ஊடகமொன்றிடம் கருத்து வெளியிட்டுள்ளார்.
மதுபான அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்ட செயன்முறை தொடர்பில் விரிவான விளக்கமொன்றை வழங்க வேண்டியுள்ளதாகவும் புதிய ஜனநாயக முன்னணி கூறியுள்ளது.
000