அடுத்த இரு மாதங்கக்குள் மின் கட்டணம் குறைப்பு - பொது பயன்பாட்டு ஆணைக்குழு தகவல்
மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான திருத்தப்பட்ட யோசனையை நாளை (06) பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இது தொடர்பான தரவு மதிப்பாய்வு தற்போது நிறைவடைந்துள்ளதாக மின்சார சபை குறிப்பிட்டுள்ளது.
இதன்படி, மின்சாரக் கட்டணம் எவ்வளவு வீதம் குறைக்கப்பட வேண்டும் என்பது தொடர்பில் இறுதிக் கணக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மின்சார சபை தெரிவித்துள்ளது.
திருத்தப்பட்ட பிரேரணையை சமர்ப்பித்த பின்னர், பொது பயன்பாட்டு ஆணைக்குழு இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளும்.
இலங்கை மின்சார சபை மின்சார கட்டணத்தை குறைப்பதற்கான பிரேரணையை முன்னர் சமர்ப்பித்திருந்த போதிலும், அதனை திருத்தியமைத்து மீண்டும் சமர்ப்பிக்க வேண்டுமென பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி புதிய திருத்தப்பட்ட முன்மொழிவு முன்வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, மின்சாரக் கட்டண திருத்த யோசனை சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர் ஆறு முதல் எட்டு வாரங்களுக்குள் மின் கட்டணத்தை திருத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புதிய கட்டண திருத்த பரிந்துரையை பெற்று, ஆய்வு செய்த பின்னர் அது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
000