தகுதியுடையவர்களுக்கு மட்டும் ஒரு ஆயுதம் வழங்கப்படும் - பாதுகாப்புச் செயலாளர்
தகுதியுடையவர்களுக்கு மட்டும் ஒரு ஆயுதம் வழங்கப்படும் என பாதுகாப்புச் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யாகொன்தா தெரிவித்துள்ளார்.
தற்பொழுது ஆயுதங்கள் பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பில் விசாரணை நடத்தி மெய்யாகவே உயிர் ஆபத்து இல்லாதவர்களிடமிருந்து துப்பாக்கி மீளப் பெற்றுக்கொள்ளப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
கடந்த அரசாங்கங்கள் தகுதியில்லாதவர்களுக்கு ஆயுதங்கள் வழங்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு தகுதியற்றவர்களுக்கு ஆயுதங்கள் வழங்குவது மிகவும் ஆபத்தானது என சுட்டிக்காட்டியுள்ளார்.
இதேவேளை, தகுதியானவர்களுக்கு ஒரு ஆயுதம் மட்டும் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி ஒருவர் பல ஆயுதங்களை பெற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கூடுதலான ஆயுதங்களை பெற்றுக்கொண்டவர்கள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
தற்பாதுகாப்புக்காக எனக்கூறி இவ்வாறு ஆயுதங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
000