
வியாபாரிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்கின்ற வியாபாரிகள் மற்றும் நடமாடும் வியாபாரிகளின் அனுமதிப் பத்திரங்கள் இரத்து செய்யப்படும் என்று சந்தைப்படுத்தல் கூட்டுறவு சேவைகள் சந்தை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்தார்.
இரத்து செய்யப்படுகின்ற அனுமதிப்பத்திரங்களை வேறு வியாபார நிலையங்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்.
மேலும், அனைத்து கிராம சேவகர் பிரிவுகளுக்கும், அத்தியாவசிய பொருட்களை விற்பனை செய்வதற்கு இரண்டு அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை, அதிக விலைக்கு பொருட்களை விற்பனை செய்யும் வியாபார நிலையங்கள் தொடர்பாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபைக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.
இதனால் அனைத்து மாவட்டங்களினதும் நுகர்வோர் சேவை அதிகாரிகள் அவதானமாக இருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.