Category:
Created:
Updated:
இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 42 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தினார். கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,405 ஆக அதிகரித்துள்ளது.நேற்று (29) 2,827 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதற்கமைய நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 180,538 ஆக அதிகரித்துள்ளது.இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 2,029 பேர் நேற்று (29) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 148,391 ஆக அதிகரித்துள்ளது.