
தமிழ் மக்களுக்கு உதவுவதற்கு புலம்பெயர் உறவுகள் முன்வர வேண்டும்
கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள வடக்கு - கிழக்கு தமிழ் மக்கள் அரசாங்கத்திடம் கையேந்தாத வகையில் உதவுவதற்கு புலம்பெயர் உறவுகள் முன்வர வேண்டும் என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.
வவுனியாவில் அமைந்துள்ள ரெலோ அலுவலகத்தில் இன்று இடம்பெற்ற டக சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், அரசாங்கத்தின் சரியான திட்டமிடல் இன்மையால் நாடு மோசமான நிலையை அடைந்துள்ளது. வடக்கு - கிழக்கு பகுதியில் எமது மக்களுக்கு தடுப்பு மருந்து என்பது இன்னும் ஏற்றப்படவில்லை. கொரோனா தொற்றை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றால் மக்களை நடமாடல் செய்வது மட்டுமல்ல. கொரோனாவை கட்டுப்படுத்தக் கூடிய தடுப்பு மருந்தை செலுத்தி உலக நாடுகள் வெற்றி கண்டுள்ளது. இலங்கையில் சரியாக திட்டமிடப்படவில்லை.
யாராவது இலவசமாக தடுப்பு மருந்தை கொடுத்தால் அரசாங்கம் வாங்குகிறது. இந்தியா, சீனா, ரஸ்சியா கொடுத்தால் வாங்குகிறார்கள். இலங்கை அரசாங்கம் கொரோனா தடுப்பு மருந்தை வாங்கப் போவதாக சொல்கிறது. ஆனால் வாங்குவதற்கான திட்டத்தை, நிதி ஒதுக்கீட்டை இதுவரை செய்யவில்லை. அரசாங்கம் மிகவும் கவலையீனமாக இருப்பதை காண முடிகிறது. சும்மா கொடுத்தால் வாங்குகின்ற நிலமையில் இருக்கிறது. இது இந்த நாட்டு மக்களை காக்கும் திட்டமா என்பது எனது கேள்வி?
சீனாவிற்கு கொடுக்கும் கௌரவம் தமிழ் இனம், மலைக மக்கள், முஸ்லிம்க மக்கள் ஆகியோருக்கு வழங்கப்படவில்லை. அவர்களது அடையாளத்தை அழிக்கும் மோசமான செயற்பாட்டை செய்கிறது. சிங்கள மக்களை திருப்திப்படுத்துவதற்காக மீள் உருவாக்கம் என்னும் பெயரில் பத்திரிகையாளர் உட்பட பலரை பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் திட்டமிட்டு கைது செய்து வருகின்றார்கள். வடக்கு - கிழக்கில் மூன்று தேசிய இனங்களையும் அடக்கி ஒடுக்குவது அரசின் திட்டமமாக உள்ளது. இலங்கையில் வாழும் அனைத்து இனங்களையும் சரி சமனாக நடத்த வேண்டும் என்பது எனது கோரிக்கை.
பாதிக்கப்பட்ட குடும்பங்களின் உடனடி தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும். புலம்பெயர் தேசங்களில் வாழும் எமக்கு ஒத்தாசை வழங்குகின்ற உறவுகள் வடக்கு - கிழக்கு மக்கள் கொரோனாவால் பதிக்கப்பட்டுள்ளார்கள். அரசாங்கத்திடம் கையேந்தாத வகையில், அவர்கள் வடக்கு - கிழக்கு தமிழ் மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் எனவும் தெரிவித்தார்.