
சினிமா பாணியில் உண்மை சம்பவம்
மனைவியுடன் பேசிய தம்பியை கத்தியால் குத்திய அண்ணனை போலீசார் தேடி வருகின்றனர். திருச்சி எடத்தெரு பிள்ளைமாநகரை பகுதியை சேர்ந்தவர் அருண் (வயது 29). இவரின் மனைவி வெற்றிச்செல்வி. அருணின் பெரியப்பா மகன் ஜாக்சன் (வயது 27) என்பவர் அண்ணன் மனைவி வெற்றிச்செல்வியுடன் அடிக்கடி பேசிக் கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது.
அருணுக்கு சந்தேகம் ஏற்பட்டு பலமுறை கண்டித்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை மார்க்கெட் பகுதியில் ஜாக்சன் வெற்றிச்செல்வியுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது வந்த அருண் தனது மனைவியுடன் ஜாக்சன் பேசிக் கொண்டிருப்பதை கண்டு ஆத்திரம் அடைந்து சண்டை போட்டுள்ளார்.
இதில் ஆத்திரம் அடைந்த அருண் தனது இடுப்பில் இருந்த கத்தியை எடுத்து தனது ஜாக்சனை தம்பி என்று கூட பார்க்காமல் சரமாரியாக குத்தியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த ஜாக்சன் ரத்தவெள்ளத்தில் விழுந்தார்.
அருண் அங்கிருந்து தப்பி ஓடினார். இதுகுறித்து தகவல் அறிந்த காந்தி மார்க்கெட் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து ஜாக்சனை மீட்டு தீவிர சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.