Category:
Created:
Updated:
யாழ்.போதனா வைத்தியசாலையின் கோவிட் சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த சிறுமியொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 26ம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அந்த சிறுமி உயிரிழந்துள்ளார். குறித்த சிறுமியின் பிரேத பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் – கொக்குவில் மேற்கு,எம்.ஜே.ஜா மன்னபுரி சாலை பகுதியை சேர்ந்த 5 வயதுடைய குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது.