Category:
Created:
Updated:
கிளிநொச்சி உருத்திரபுரம் சிவநகர் பகுதியில் வெடிக்காத நிலையில் தாக்குதல் விமானத்தால் வீசப்பட்ட குண்டு அடையாளம் காணப்பட்டுள்ளது.கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உருத்திரபுரம் பகுதியில் காணி துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டிருந்த போது அடையாளம் காணப்பட்டு பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.இதை அடுத்து பொலிசாரும், படையினரும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளனர்.குறித்த குண்டை பாதுகாப்பாக செயலிழக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.