Category:
Created:
Updated:
தென்கொரியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் இனி பொது இடங்களில் முகக்கவசம் அணியத் தேவையில்லை என அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.
தலைநகர் சியோலில் நேற்று (புதன்கிழமை) கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் அந்நாட்டு பிரதமர் கிம் பூ கியூம் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில், ‘எதிர்வரும் ஜூன் மாதம் முதல், முதல் தவணை தடுப்பூசி எடுத்துக்கொண்ட மக்கள் பெரிதளவில் கூடவும், வழிபாட்டுத் தலங்களுக்கு செல்வதற்கும் அனுமதிக்கப்படுவார்கள்.
நாட்டில் 70 சதவீதத்துக்கும் அதிகமான மக்களுக்கு கொரோனா தடுப்பூசி சென்றடையும் பட்சத்தில், வரும் அக்டோபர் மாதம் அனைத்து கொரோனா கட்டுப்பாடுகளும் தளர்த்தப்படும்’ என கூறினார்.