Category:
Created:
Updated:
சினோவெக் கொவிட் 19 தடுப்பூசியை உள்நாட்டில் தயாரிப்பது குறித்த கலந்துரையாடல் வெற்றி அடைந்திருப்பதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.சீன அரசாங்கத்தின் கண்காணிப்பின் கீழ் இலங்கையில் இந்த சினோவெக் தடுப்பூசி தயாரிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் இதனை தெரிவித்தார்.இரண்டு நாடுகளினதும் கூட்டு முயற்சியாக இந்த தடுப்பூசி தயாரிக்கப்படும். மேலும் 20 லட்சம் சைனோபார்ம் தடுப்பூசிகள் அடுத்த மாதத்திற்குள் நாட்டுக்கு வழங்கப்படும்.கட்டளையிட்டு உள்ள இந்த தடுப்பூசிகள் ஜூன் மாதம் இரண்டாம் வாரத்திற்குள் இலங்கை வந்தடையும் என எதிர்பார்ப்பதாக இராஜாங்க அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.