Category:
Created:
Updated:
வடக்கில் தொடர்ந்தும் வீசி வரும் கடும் காற்றினால் யாழ்ப்பாணம் முகமாலைப் பகுதியில் வீட்டின் கூரைத்தகடு உடைந்து வீழ்ந்ததில் முதியவர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.குறித்த சம்பவம் முகமாலை வடக்குப் பகுதியில் நேற்று மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த இளையவி செல்லையா (வயது 86) என்பவரே படுகாயம் அடைந்துள்ளார்.வீட்டில் அவர் படுத்திருந்தபோது கூரைத்தகடு உடைந்து அவரின் தலையில் வீழ்ந்ததால் அவர் தலையில் படுகாயம் அடைந்துள்ளார்.அவர் உடனடியாக மீட்கப்பட்டு யாழ்.போதனா வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வடக்கில் தொடரும் காற்றினால் பெருமளவான மரங்கள் முறிந்துவீழ்ந்துவருவதுடன் பெருமளவான விவசாயச் செய்கைகளும் பாதிக்கப்பட்டுவருகின்றன.