Category:
Created:
Updated:
கிளிநொச்சி ஜெயபுரம் பகுதியில் விபத்து சம்பவத்தில் கிராம சேவையாளர் பலியாகியுள்ளார். குறித்த விபத்து நேற்று இரவு யாழ் மன்னார் வீதியில் இடம்பெற்றுள்ளது.குறித்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த முழங்காவில் கிராம சேவையாளரான பி.நகுலேஸ்வரன் என்ற குடும்பத்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.மோட்டார் சைக்கிள் எதனுடன் மோதி விபத்துக்குள்ளானது என்பது தொடர்பான விசாரணைகளை ஜெயபுரம் பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.குறித்த விபத்து சம்பவம் இரவு 8.45 மணிக்கு இடம்பெற்றுள்ளதாகவும், மோட்டார் சைக்கிள் எவ்வாறு விபத்துக்குள்ளானது என்பது தொடர்பான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிசார் மேலும் தெரிவிக்கின்றனர்.