Category:
Created:
Updated:
தற்பொழுது வீசிவரும் கடும் காற்று காரணமாக கிளிநொச்சி முரசுமோட்டை பிரதேசபைக்குட்பட்ட தர்மபுர பொதுச் சந்தையில் கூரை முற்றுமுழுதாக தூக்கி வீசப்பட்ட நிலையில் காணப்படுகிறது. அப்பகுதியில் அன்றையதினம் மக்கள் நடமாட்டம் குறைந்த காரணத்தினால் பேரிழப்புகள் ஏதுமின்றி மக்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பினர். இதன் காரணமாக முற்றுமுழுதாக தமக்கு வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தை வியாபாரிகள் தெரிவித்துள்ளனர் இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைவாக மக்கள் கூரையினை புனரமைத்து தருமாறு தெரிவித்துள்ளனர்.