வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்தியர் கலைநாதன் இராகுலன் பொறுப்பேற்றுக்கொண்டார்.
வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக வைத்தியர் கலைநாதன் இராகுலன் தனது கடமைகளை இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தின் புகழ்பூத்த பழையமாணவர்களில் ஒருவரான இவர் யாழ் பல்கலைக்கழகத்தில் மருத்துவ பட்டத்தையும் கொழும்பு பல்கலைக்கழகத்தில் மருத்துவ நிர்வாக மாணி பட்டப்படிப்பையும் நிறைவு செய்துள்ளார். முன்னர் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக கடமைகளை ஏற்று சிறப்பாக செயற்பட்டிருந்ததோடு, மக்களுக்கு திருப்திகரமான சேவையை வழங்கும் வைத்தியசாலையாக மாற்றுவதில் பெரும்பங்காற்றியவர். கொரோனா நோய்தொற்று காலத்தில் சிறப்பான நிர்வாகத்தை வழங்கியதுடன் நோயாளர் மற்றும் ஊழியர்களது பாதுகாப்பில் அதிக கரிசனை கொண்டிருந்தார்.
தற்போது வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையின் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளதுடன் வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களுக்கான கொரோனா தடுப்பு இணைப்பாளராகவும் செயற்படுவது குறிப்பிடத்தக்கது.