
கொரோனா தடுப்பூசி போடும் பணி தொய்வின்றி நடைபெற வேண்டும் - ஸ்டாலின்
கொரோனா தொற்றின் 2-வது அலை வேகமாக பரவிவரும் நிலையில், நாளை முதல் ஒரு வாரத்திற்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கை அமல்படுத்துவது குறித்து அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனையில் ஈடுபட்டார். இந்த ஆலோசனையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி, தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,
* நாளை முதல் முழு ஊரடங்கு அமலாவதால் காய்கறிகளுக்கு தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்.
* பால் விநியோகமும் தங்கு தடையின்றி நடைபெறுவதை ஆட்சியர்கள் உறுதிப்படுத்த வேண்டும்.
* ஊரடங்கு காலத்தில் கொரோனா தடுப்பூசி போடும் பணி தொய்வின்றி நடைபெற வேண்டும்.
* முழு ஊரடங்கின் போது விதிகளை முறையாக கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும்.
* அதிகார மோதல்கள் இல்லாமல் ஒருங்கிணைந்து செயல்பட்டு கொரோனா எனும் பெருந்தொற்றை வீழ்த்த வேண்டும்.
* மருத்துவமனைகளில் ஆக்சிஜன், படுக்கைகள் தட்டுப்பாடு இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
* கொரோனா நிவாரண தொகை அனைத்து மக்களுக்கும் முழுமையாக சென்றடைந்ததா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.