அரச நிறுவனங்களிடமிருந்து 92 பில்லியன் வரி அறவீடு - எஞ்சிய ரூ. 724 பில்லியனை அறவிடவும் உத்தரவு
அரசாங்க நிறுவனங்களிடமிருந்து அறவிடப்பட வேண்டிய 29 பில்லியன் ரூபா நிலுவையை, அறவிடுவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாடாளுமன்ற வழிவகைகள் தொடர்பான குழு, இறைவரித் திணைக்களத்தை அறிவுறுத்தியுள்ளது. பாராளுமன்ற கட்டடத்தில் இடம் பெற்ற தேசிய வருமான வரி திணைக்களத்தின் வருமானஅதிகரிப்பு முன்னேற்றம் தொடர்பான பேச்சு வார்த்தையிலே இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வருடத்தின் ஆரம்பத்திலிருந்து 2024 ஜூன் 30 வரை எதிர்பார்த்த வரி இலக்கு 826 பில்லியன் ரூபா என்றும், இக்காலப் பகுதியில் 92 பில்லியனை வரி அறவீடாகப் பெற்றுக் கொள்ள முடிந்துள்ளதாகவும் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
அதே வேளை,மேன்முறையீட்டு நடைமுறை காரணமாக வரி அறவிடுவதில் ஏற்படும் தாமதத்தை தவிர்ப்பதற்கு தேசிய வருமான வரி சட்டத்தை விரைவில் திருத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தற்காலிகமாக வற் இலக்கத்தை பெற்றுக் கொடுக்கும் நடவடிக்கைகளால், இடம்பெற்றுள்ள மோசடிகளை தவிர்ப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், இவ்வருடத்தின் நடுப்பகுதியாகும் போது தற்காலிக வற் இலக்கம் வழங்குவதை நிறுத்துவதற்கு யோசனையை முன் வைக்குமாறும் இங்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
00