ரஷ்யாவும் சீனாவும் மூன்றாம் உலகப்போருக்கு வித்திடக்கூடும் - போர் விமானங்கள் எச்சரிக்கை
ரஷ்ய மற்றும் சீன போர் விமானங்கள் இணைந்து சர்வதேச எல்லையில் அண்மைக்காலத்தில் போர் ஒத்திகை நடத்திய விடயமானது பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
இந்நிலையில் ஏதேனும் குழப்பம் நிகழுமானால், அதை எதிர்கொள்வதற்காக, அமெரிக்க மற்றும் கனேடிய போர் விமானங்கள் அவசரமாக புறப்பட்ட சம்பவமும் நிகழ்ந்தது.
அமெரிக்கத் தரப்பானது, சமீபத்தில் ரஷ்ய மற்றும் சீன போர் விமானங்கள் இணைந்து சர்வதேச எல்லையில் நடத்திய போர் ஒத்திகையால் அச்சுறுத்தல் எதும் இல்லை என தெரிவித்துள்ளது.
இவ்வாறிருக்கையில், ரஷ்ய மற்றும் சீன போர் விமானங்கள் இணைந்து சர்வதேச எல்லையான Bering கடல் பரப்பில் குண்டு வீசும் திறன்கொண்ட போர் விமானங்களைக் கொண்டு போர் ஒத்திகை நடத்தியது, முக்கியத்துவம் வாய்ந்த விடயம் என பக்கிங்காம் பல்கலை அரசியல்துறை பேராசிரியரான அந்தோனி கிளஸ் (Anthony Glees) குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஜேர்மனியும், ஜப்பானும் இரண்டாம் உலகப்போரில் கைகோர்த்தன. அதே போன்றதொரு உறவை ரஷ்யாவும் சீனாவும் உருவாக்கியுள்ளன.
ஆகவே, அவர்கள் உலகை மூன்றாம் உலகப்போரை நோக்கி தள்ளக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
000