Category:
Created:
Updated:
பொலிஸ்மா அதிபர் தொடர்பில் எழுந்துள்ள பிரச்சினை குறித்து சபாநாயகர் மற்றும் பிரதம நீதியரசர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதன்படி, இருவரும் பேச்சுவார்த்தை நடாத்தி இந்த பிரச்சினைக்கு இந்த வாரத்திற்குள் தீர்வு காண வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹோமாகம பகுதியில் நேற்று (28) பிற்பகல் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் கூறினார்.
இதன்படி, செப்டம்பர் மாதம் 21ம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடாத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ள விதத்தில், தேர்தல் நடைபெறும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000