தேர்தல் சட்டத்தைப் பாதுகாப்பது ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் வேட்பாளர்களின் பொறுப்பாகும் - PAFRAL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் வலியுறுத்து
தேர்தலுக்கு முன்னதான காலப்பகுதியில் தேர்தல் சட்டத்தைப் பாதுகாப்பது ஒவ்வொரு அரசியல் கட்சி மற்றும் வேட்பாளர்களின் பொறுப்பாகும் என PAFRAL அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.
அத்துடன், தேர்தல் பிரசாரங்களின்போது சுற்றாடல் பாதுகாப்பையும் கவனத்தில் கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் செப்டம்பர் 21ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது.
அத்துடன் ஜனாதிபதித் தேர்தலின் எதிர்வரும் நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலர்களுக்கு அறிவிக்கவும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.
இதன்படி எதிர்வரும் காலங்களில் அவர்களை அழைத்து இது தொடர்பில் தெளிவுபடுத்தத் தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்பாடு செய்துள்ளது.
இதேவேளை, தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கும் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும் ஓகஸ்ட் 7ஆம் திகதி நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறான பின்னணியில் தேர்தல் சட்டத்தைப் பாதுகாக்க ஒவ்வொரு அரசியல் கட்சியும் வேட்பாளரும் செயற்பட வேண்டுமென தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் கோரியுள்ளன.
000