வடக்கு மாகாண பனை அபிவிருத்தி வாரத்தின் இறுதி நாள் இன்று – பிரதம அதிதியாக சங்கிலியன் பூங்கா சென்ற அமைச்சர் டக்ளஸ்!
“வடக்கு மாகாண பனை அபிவிருத்தி வாரம் 2024 பனைசார் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் விற்பனையும்” மற்றும் கலைநிகழ்வுகளின் இறுதிதாள் நிகழ்வுகளில் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பித்துள்ளார்.
வடக்கு மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களம், வடக்கு மாகாண பனை தென்னைவள கூட்டுறவு சங்கங்கள் மற்றும் சமாசங்கள் இணைந்து யாழ் சங்கிலியன் பூங்காவில் குறித்த “வடக்கு மாகாண பனை அபிவிருத்தி வாரம் 2024 பனைசார் உற்பத்தி பொருட்களின் கண்காட்சியும் விற்பனை” மற்றும் கலைநிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தது.
முன்பதாக யாழ்ப்பாணத்தில் பனை வார கண்காட்சி யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் கடந்த திங்கட்கிழமை (22) ஆரம்பமாகி இன்று சனிக்கிழமை (27) வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது
இக்கண்காட்சியில் பனையிலிருந்து கிடைக்கும் பல்வேறு வகையான உணவு உற்பத்திப் பொருட்களும் கைப்பணிப் பொருட்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
பனை தென்னை அபிவிருத்தி கூட்டுறவு சங்கங்களும் வட மாகாண கூட்டுறவு அபிவிருத்தி திணைக்களமும் இணைந்து இந்த கண்காட்சியை ஏற்பாடு செய்திருந்த நிகழ்வகளின் இறுதிதாள் நிகழ்வான இன்று குறித்த நிகழ்வின் பிரதம விருந்தினராக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது
000