2024 பாரிஸ் ஒலிம்பிக் - தேசத்தை பெருமைப்படுத்திய இலங்கைக் கொடி
2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகளானது வெள்ளிக்கிழமை இரவு பிரான்ஸ் தலைநகரில் தொடக்க விழாவுடன் கோலாகலமாக ஆரம்பிக்கப்பட்டது.
ஆகஸ்ட் 11ஆம் திகதி வரை நடைபெறும் இந்த விளையாட்டு திருவிழாவில் 206 நாடுகளைச் சேர்ந்த 10,741வீரர், வீராங்கனைகள் பங்கெடுக்கின்றனர்.
ஒலிம்பிக் வரலாற்றில் முதல் முறையாக தொடக்க விழா விளையாட்டு அரங்கில் நடைபெறாமல் திறந்த வெளியில் நடைபெற்றது.
பாரிஸ் நகரின் முக்கிய அடையாளமான சீன் நதியில் பிரம்மாண்டமாக தொடக்க விழா அணி வகுப்பு நடைபெற்றது.
சுமார் 100 படகுகளில் ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் அந்தந்த நாடுகளின் கொடியை ஏந்தியபடி 6 கிலோ மீட்டர் தூரம் அணிவகுத்துச் சென்றனர்.
இதன்போது, வர்ணனையாளர்களினால் இலங்கையின் கொடி மிகவும் அழகான ஒன்றாகப் போற்றப்பட்டது.
வர்ணனையாளர்கள் இலங்கை தேசியக் கொடியின் துடிப்பான வடிவமைப்பு மற்றும் முக்கியத்துவத்தைப் பாராட்டினர்.
வரலாற்று சிறப்பு மிக்க பாரிஸின் பின்னணியில் பறக்கும் இலங்கைக் கொடியின் காட்சி, விளையாட்டுப் போட்டியின் அற்புதமான தொடக்கத்தை உலகமே பார்த்துக் கொண்டிருந்தபோது தேசத்தை பெருமையில் ஆழ்த்தியமை குறிப்பிடத்தக்கது
000