பிரான்சில் உள்நாட்டுப் போர் வெடிக்கும் அபாயம்
பிரான்ஸில் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும் அபாயம் காணப்படுவதாக அந்நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் எச்சரித்துள்ளார்.
பிரான்சில் எதிர்வரும் 30 ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 7 ஆம் திகதி வரை நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளது. குறித்த தேர்தலில் அந்நாட்டின் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் தலைமையிலான நேஷனல் ரேலி கட்சிக்கும், இடதுசாரியான நியூ பாப்புலர் முன்னணி கூட்டணிக்கும் இடையில் தீவிர போட்டி நிலவி வருகின்றது.
தேர்தலை முன்னிட்டு நேற்றைய தினம் இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய மக்ரோன் ” குறித்த இரு கட்சிகளுக்கும் இடையே காணப்படும் தேர்தல் போட்டியானது உள்நாட்டுப் போர் ஏற்படுவதற்கு வழிவகுக்கும் எனத் தெரிவித்திருந்தார்.
இதேவேளை வலதுசாரிகளுக்கே பெரும்பான்மை கிடைக்கும் என்று தேர்தலுக்கு முந்திய கருத்துக்கணிப்புகளில் கூறப்பட்ட நிலையில் வலதுசாரிகளுக்கு எதிராக ஆயிரக்கணக்கான பெண்கள் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.