காசா போரின் 21,000 குழந்தைகள் மாயம் - save the children அறிக்கையில் தகவல்!
காசா போரின் போது 21,000 பாலஸ்தீன குழந்தைகள் காணாமல் போயுள்ளதாகவும் 4,000 குழந்தைகள் இறந்துள்ளதாகவும் save the children வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரியவந்துள்ளது
கடந்த ஆண்டு அக்டோபர் 7 ஆம் திகதி ஹமாஸ் உறுப்பினர்கள் இஸ்ரேலுக்குள் நுழைந்து தொடர் தாக்குதல்களுக்குப் பிறகு, இஸ்ரேல் காசா பகுதி மீது தாக்குதல் நடத்தத் தொடங்கியது.
அந்தத் தாக்குதல்களில் 37,500 க்கும் மேற்பட்ட காசா மக்கள் கொல்லப்பட்டுள்ளனர், அவர்களில் பெரும்பாலோர் குழந்தைகள் என தெரியவந்துள்ளது
யுத்தத்தின் போது இழந்த பிள்ளைகளை அவர்களது பெற்றோருடன் ஒன்றிணைப்பதற்கு சாத்தியமான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ள போதிலும், அதிகரித்து வரும் மோதல்கள் காரணமாக இந்த நிலைமை கடினமானதாக மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தவிர, இஸ்ரேல் இராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட குழந்தைகளும் கணிசமான அளவில் இருப்பதாகவும் அந்த அறிக்கை மேலும் குறிப்பிட்டுள்ளது.
000