பாதாளக் குழுவினரின் ஆயுதங்களை கண்டறிய நடவடிக்கை - பொலிஸ் மா அதிபர் தெரிவிப்பு
நீதித்துறை நடவடிக்கை மூலம் அடையாளம் காணப்பட்ட போதைப்பொருள் கடத்தல்காரர்களில் தொண்ணூற்றொரு வீதமானவர்கள் கைது செய்யப்பட்டது போல பாதாள உலகத்தின் மறைத்து வைக்கப்பட்ட ஆயுதங்களைக் கண்டறியும் நடவடிக்கையை ஆரம்பிக்க தீர்மனிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் போதே பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் இதனை வலியுறுத்தியுள்ளார்.
இதற்காக அரச புலனாய்வுப் பிரிவு, பொலிஸ் விசேட பணியகம், பொலிஸ் விசேட அதிரடிப்படை மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் என்பனவற்றை ஈடுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த கொஸ்கொட தாரக மற்றும் கோனா கோவிலே ரோஹா ஆகியோரிடம் இருந்த துப்பாக்கிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றும் டுபாயில் உள்ள கரந்தெனிய சுதாவின் ஆயுதக் களஞ்சியசாலையை உடனடியாகக் கண்டுபிடிக்க வேண்டும் என இங்கு வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீதி நடவடிக்கைக்காக பாதாள உலக செயற்பாட்டாளர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ள நிலையில், பாதாள உலக அமைப்பினருக்கு சொந்தமான ஆயுதங்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கையை ஜூலை முதல் வாரத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் என பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் வெளிநாட்டு பாதாள உலகத்தினர் ஆயுதம் ஏந்திய சமூகத்தில் சுற்றித்திரிந்தாலும் இராணுவத்தில் ஸ்னைப்பர்களை பயன்படுத்த எந்த நேரத்திலும் மேற்கொள்ளவோ முடியும் என பொலிஸ் மா அதிபர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதன்படி ஜூலை மற்றும் ஓகஸ்ட் மாதங்களில் முப்படையினரின் உதவியுடன் பாதாள உலகத்தை ஒழிக்கும் நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு பொலிஸ் மா அதிபர் குறிப்பிட்டுள்ளார்.
000