Ads
விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சே ஐக்கிய இராச்சியத்தில் உள்ள சிறையில் இருந்து விடுவிப்பு
விக்கிலீக்ஸ் நிறுவுனர் ஜூலியன் அசாஞ்சே ஐக்கிய இராச்சியத்தில் உள்ள சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
அமெரிக்காவில் உளவு பார்த்தல் சட்டத்தை மீறியதாகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்டில் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து அவர் விடுதலையாகி அவுஸ்திரேலியாவிலுள்ள தனது வீட்டிற்குச் செல்கிறார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஜூலியன் அசாஞ்சே, அமெரிக்க அதிகாரிகளுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டிய பின்னர், அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டு விடுதலையாகி இங்கிலாந்தை விட்டு வெளியேறியதாக விக்கிலீக்ஸ் கூறுகிறது.
ஜூலியன் அசாஞ்சே, அமெரிக்க தேசிய பாதுகாப்புத் தகவலைப் பெறுவதற்கும் வெளிப்படுத்துவதற்கும் சதி செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
000
Info
Ads
Latest News
Ads