சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் 10 நாட்களில் - வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என பரீட்சைகள் திணைக்களம் அறிவிப்பு
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் 10 நாட்களில் வெளியாகுமென வெளியான செய்தி உண்மைக்குப் புறம்பானது என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அத்துடன், பொதுத் தகவல் தொழில்நுட்ப (GIT) பரீட்சை பெறுபேறுகளே வெளியிடப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி, பொதுத் தகவல் தொழில்நுட்பம் என்பதற்குப் பதிலாக கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை என மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்பதாக 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சை கடந்த மே மாதம் 6ஆம் திகதி முதல் 15 ஆம் திகதி வரை நடைபெற்றது.
3,527 பரீட்சை மத்திய நிலையங்களில், 452,979 பரீட்சார்த்திகள் பரீட்சைக்குத் தோற்றியுள்ளனர்.
இதில் 387,648 பாடசாலை விண்ணப்பதாரிகளும், 65,331 தனியார் விண்ணப்பதாரிகளும் பரீட்சைக்குத் தோற்றியமை குறிப்பிடத்தக்கது.
000