2024 இல் இதுவரை 966,600 சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை - சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தகவல்
நாட்டில், இவ்வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் 09 இலட்சத்து 66 ஆயிரத்து 604 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இம்மாதத்தின் நேற்று வரையான காலப்பகுதியில் மாத்திரம் 69 ஆயிரத்து 825 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும் அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.
இவ்வருடத்தின் ஜனவரி மாதத்தில் 2,08,253 பெப்ரவரி மாதத்தில் 2,18,350 சுற்றுலா பயணிகளும் மார்ச்சில் 2,09,181 ஏப்ரலில் 1,48,867 மே, மாதத்தில் 1,12,128 சுற்றுலாப் பயணிகளும் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாகவும் அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.
ரஷ்யா, இந்தியா, ஜெர்மன், பிரிட்டன், சீனா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளிலிருந்தே பெருமளவிலான சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாகவும் அந்த அதிகார சபை தெரிவித்துள்ளது.
அதேவேளை, கடந்த வருடத்தில் நாட்டுக்கு 14 இலட்சத்து 97 ஆயிரத்து 300 சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்ததாகவும் அந்த அதிகார சபை மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது
000